ஆறு மில்லியன் மக்களுக்கு அச்சுறுத்தல்

0
178

நாடளாவிய ரீதியில் இதுவரையில், 20 வயதுக்கு மேற்பட்ட 6 மில்லியன் மக்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் இதுவரை பெறாதவர்கள் அவற்றை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.

தற்போது அதிக எண்ணிக்கையான கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனவே தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

நாட்டில் தடுப்பூசிகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது. சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மற்றும் வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here