2022-2023 ஆம் நடப்பாண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புலம்பெயர் வெளிநாட்டுக் கிளைகளை ஸ்தாபிக்கும் நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வு இத்தாலி மிலானே நகரில் நேற்று(25) இடம் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவதுவல மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.