இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு

0
209

நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம் பழங்குடியின வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்னும் சிறப்பை பெற்றார். எதிர்வரும் 25ஆம் திகதி பதவியேற்கவுள்ள இவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் முடிவடைகின்ற நிலையில், திரௌபதி முர்மு பதவியேற்கவுள்ளார்.

15ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ஆல் நடந்து முடிவடைந்தது. இதில் தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி திரௌபதை முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நின்ற யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். இதில் மொத்தமுள்ள 771 எம்.பி.,க்களில் 763 பேரும், 4,025 எம்.எல்.ஏ.,க்களில் 3,991 பேரும் வாக்களித்திருந்தனர்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு வாக்கு என்னும் பணிகள் ஆரம்பமாகியது. வாக்களிக்கப்பட்டப்பின்னர் வாக்கு எண்ணிக்கையின் போது தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில் முடிவில் திரௌபதை முர்மு வெற்றி பெறுவது உறுதியானது.

எதிர்க்கட்சிகள் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தோல்வியும் உறுதியானது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதி ஆகிறார் திரவுபதி முர்மு. அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் , பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரௌபதி முர்மு: பெற்ற வாக்குகள் -5,77777, யஷவந்த்சினஹா பெற்ற வாக்குகள் – 2,61,062

யார் இந்த திரௌபதி முர்மு?
ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரவுபதி முர்மு, ஜார்கண்ட் கவர்னராக இருந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி வெற்றிப்பெற்றதால், நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்னும் பெருமையை பெற்றார். அதேபோல், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிறந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதி ஆவது இதுவே முதல்முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here