இலங்கையில் உள்ள பல இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சந்தித்துள்ளார்.

இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான பெறுவதற்கான வழிகளை ஆராயும் முயற்சியிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரபல பொலிவூட் நடிகர் டினோ மோரியா மற்றும் நடிகை சித்ரங்கதா சிங் சந்தித்துள்ளனர். பொலிவூட் படங்களுக்கு இலங்கையை இடமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் விவாதித்துள்ளார்.

அவர்களது சந்திப்புக்களின் போது, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலாத் தலமாக இலங்கையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் பெர்னாண்டோ கலந்துரையாடியுள்ளார்.