இந்திய விசா விண்ணப்பங்கள், வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படுமென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதன்படி, இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவுட்சோர்ஸ் விசா விண்ணப்ப மையத்தின் (Outsourced Visa Application Centre) மூலம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் அறிவித்துள்ளது.