இன்றைய ராசி பலன் உங்களுக்கு எப்படி? 08.04.2022

0
286

மேஷம்: அசுவினி: உங்களுடைய செயல்களில் இன்று ஆதாயமான நிலை உண்டாகும்.
பரணி: நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1: நீங்கள் நினைத்ததை இன்று சாதித்து முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த ஆதாயம் உங்களை வந்து சேரும். புதிய தைரியம் பிறக்கும்.
ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்வீர்கள். முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அதற்கேற்ற வரவு ஏற்படும்.
திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: நீண்ட நாள் பிரச்னை ஒன்றிற்கு இன்று முடிவு காண்பீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
பூசம்: நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆயில்யம்: தாய்வழி உறவினர்கள் இடையே ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

சிம்மம் : மகம்: நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். லாபமான நாள்.
பூரம்: பிரச்னைகளை சரி செய்து புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
உத்திரம் 1: உங்களுடைய திறமையால் செயல்களில் லாபம் காண்பீர்கள்.
கன்னி: உத்திரம் 2, 3, 4: வரவுகளில் இருந்த தடைகள் அகலும். உற்சாகம் அதிகரிக்கும்
அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும்.
சித்திரை 1, 2: சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்: சித்திரை 3, 4: மனதில் குழப்பம் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும்.
சுவாதி: குடும்பத்தின் நலனுக்கான ஒரு முடிவை இன்று துணிச்சலுடன் எடுப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: சகபணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

விருச்சிகம் : விசாகம் 4: எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். செயலில் கவனம் வேண்டும்.
அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னைகள் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள்.
கேட்டை: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி குறித்த பேச்சு உண்டாகும். திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்.

தனுசு: மூலம்: நிதி நிலையில் இருந்த பிரச்னை தீரும். திடீர் வரவால் மகிழ்வீர்கள்.
பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்னைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள்.
திருவோணம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பொருளாதார நிலை உயரும். லாபமான நாள்.
அவிட்டம் 1, 2: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்

கும்பம்: அவிட்டம் 3, 4: நண்பர்களின் ஆதரவுடன் உங்களுடைய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் நடைபெறும்.
பூரட்டாதி 1, 2, 3: நிறைவேறாது என்று நீங்கள் நினைத்திருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.

மீனம்: பூரட்டாதி 4: பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: உங்கள் மனம் நினைப்பதை உங்களால் செயல்படுத்த முடியாமல் போகும்.
ரேவதி: உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும் வகையில் சிலர் செயல்படுவர். நிதானம் அவசியம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here