நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு இருப்பதால், முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

தற்போது 40,000 மெட்ரிக் டன் டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் ஜூன் 9 அல்லது 10 ஆம் திகதி டீசல் கப்பல் வந்தால் மாத்திரமே பாவணைக்கு இருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்தியாவின் கடன் உதவியினால் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டிற்கு டீசல் வரவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.