பாராளுமன்றம் இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை  கூடவுள்ளது.

கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளதோடு நாட்டில் தற்பொழுது நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து 22ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

கடந்த மார்ச் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் 23ஆம் திகதி நடைபெறவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.