இன்று சூரிய கிரகணம் – அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

0
2208

2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 ம் திகதி  வருகிறது. அதாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் பகல் 2.28 மணிக்கு

கிரகணம் என்பது வானில் தோன்றக் கூடிய ஒரு அதிசய நிகழ்வு ஆகும். இதனை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகையான கிரகணங்களாக நாம் சொல்கிறோம். சூரியன், சந்திரன், பூமி இவை மூன்று ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் நாம் கிரகண காலம் என்கிறோம். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வை தான் நாம் சூரிய கிரகணம் என்கிறோம்.

2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 ம் தேதி வருகிறது. அதாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் பகல் 2.28 மணிக்கு துவங்கி, மாலை 6.32 வரை கிரகணம் உள்ளது. இதில் 4.30 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கிரகண நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என முன்னோர்கள் நமக்கு வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பல அறிவியல் காரணங்களும் உண்டு.

என்ன செய்ய வேண்டும்

கிரகண நேரத்தில் எல்லா பொருட்களின் மீதும் தர்ப்பையை போட்டு வைப்பார்கள். தர்ப்பைக்கு எல்லாவிதமான தீயசக்திகளிடம் இருந்து நம்மை காக்க கூடிய தன்மை உண்டு. தர்ப்பை சாதாரண புல் கிடையாது. தர்ப்பை காட்டில் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நுழையாது. தர்ப்பை விஷ முறிவாக செயல்படக் கூடியது. அதனால் குடிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில், உணவுப் பொருட்கள் வைக்கக் கூடிய குளிர்சாதனப் பெட்டி, சாப்பாட்டு பொருட்கள் வைக்கக் கூடிய பாத்திரங்களின் மீது தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.

செய்யக் கூடாதது

சாப்பாட்டு பொருட்களில் கிரகணத்தின் போது விஷத்தன்மை கலந்து விடும் என்பதால் தான் கிரகண நேரத்திலும், கிரகண நேரத்தில் வீட்டில் வைக்கக் கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதனால் கிரக நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடனேயே தர்ப்பையை வைத்திருப்பது அவசியம்.

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியது

பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்களில் நடை சாற்றப்படும். கிரகணம் என்றாலே குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் செல்ல வேண்டி இருப்பவர்கள் பகல் 1 மணிக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்து விட்டு, இரவு 7 மணிக்கு மேல் வெளியில் செல்லலாம். கிரகண நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் ஏதும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், பழ ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். முடிந்த வரை பழச்சாறாக எடுத்துக் கொள்வது நல்லது.

கிரகண நேரம் ஆகாததா ?

அறிவியல் ரீதியாக கிரகண காலம் ஆகாதது என சொல்லப்பட்டாலும், வழிபாட்டிற்கு மிக உகந்த காலம் இந்த கிரகண காலம் தான். எந்த வழிபாட்டை இந்த சமயத்தில் நாம் மேற்கொண்டாலும் அதில் உயர்வான பலன் கிடைக்கும். தர்ப்பணம், தானம் போன்றவை இந்த காலத்தில் செய்யலாம். பொதுவாகவே கிரகண காலத்தில் தெய்வங்கள் ஆற்றல் இழந்து காணப்படும். அதனால் தான் கிரகண காலத்தில் கோவில் நடை சாற்றப்படுகிறது என்ற கூற்று ஒன்று உண்டு. ஆனால் உண்மையில், உலகில் தீய சக்திகளை அழிக்க இறைவன், கதவடைத்து செய்யக் கூடிய அதீத உச்சநிலையில் இருப்பதை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக தான் கோவில்களில் கதவுகள் மூடப்படுகிறது. இதனால் தான் கிரகணம் முடிந்த பிறகு அபிஷேகம் செய்து குளிர வைத்து, சாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது.

கிரகணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?

கிரகணம் முடிந்து குளிக்கும் போது அந்த தண்ணீரில் ஒரு பிடி கல் உப்பை போட்டு குளித்தால், நமக்கே தெரியாமல் சூரிய ஒளி நம் மீது பட்டிருந்தாலும் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி, தீய சக்திகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். கல் உப்பு, நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி கொண்டது. இதனால் தான் மங்கல நிகழ்ச்சிகளின் போது கல் உப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here