இன்று சூரிய கிரகணம் தென்படும் இடங்கள்

0
370

இலங்கையில் இன்றைய தினம் பகுதியளவு சூரிய கிரகணத்தை காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்  எனவும்  மாலை 5.27 மணி முதல் யாழ்ப்பாணத்தில் 22 நிமிடங்களுக்கும், கொழும்பில் 5.43 மணி முதல் 9 நிமிடங்களுக்கும் பகுதியளவு சூரிய கிரகணம் தெரியும் எனவும், ஆனால் நாட்டின் தென்பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளி மிகவும் குறைவாக இருக்கும் போது ஏற்படும் பகுதியளவு சூரிய கிரகணத்தால், அதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும்   இன்னும் 5 வருடங்களின் பின்னரே இனி இலங்கையில் மீண்டும் சூரிய கிரகணம் ஒன்று தோன்றும் எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here