2,000 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் கேஸ் விநியோகிக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மாத்திரம் விசேட எரிவாயு விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் முதல் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மாத்திரம் விசேட எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.