3,000 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக லாஃப் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.

டொலர் நெருக்கடி காரணமாக நாட்டில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக குறித்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.