நாடளாவிய ரீதியில் 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் 8,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனையடுத்து, இந்த விசேட டெங்கு தடுப்பு தினம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு மணிநேரம் தமது வளாகங்களை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.