இன்று வெளியாகிறது ஹன்சிகா மோத்வானியின் 50ஆவது திரைப்படம்

0
224

நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50ஆவது படமான ‘மஹா’, பல தடைகளை கடந்து இன்று வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் வி.மதியழகன் தயாரிப்பில் அறிமுக ,யக்குநர் யு.ஆர்.ஜமீல் டைரக்ட் செய்துள்ள படம், ‘மஹா’.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.
ஸ்ரீகாந்த், ரேஷ்மா, சனம் ஷெட்டி, மேகா ஸ்ரீகாந்த், நந்திதா ஜெனிபர், தம்பி ராமையா, மகத், கருணாகரன், சுஜித் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று 22ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குநர் ஜமீல் ஆகியோர் கூறியதாவது:-

‘மஹா’ படம், ஹன்சிகா மோத்வானிக்கு இது 50ஆவது படமாகும். இந்தப் படம் வெளியாவதற்கு பல சிக்கல்கள் எழுந்தன. இருந்தாலும் தடைகளை கடந்து நாளை 22ஆம் திகதி படம் வெளியாகவுள்ளது.

குழந்தைகளை கடத்திக் கொள்ளும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதையாக படம் தயாராகி இருக்கிறது. ஒரு குழந்தையின் தாயாக தனது அனுபவமிக்க நடிப்பால் ஹன்சிகா கலக்கி இருக்கிறார். ஹன்சிகாவுக்கு ஜோடியாக சிம்பு பிரமாதப்படுத்தி இருக்கிறார். இருவரும் ஜோடியாக தோன்றும் காட்சிகள் பார்வையாளர்களை கலகலப்பூட்டும்.

காட்சிக்கு காட்சி பரபரப்பு விறுவிறுப்புகளுடன் ,ந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும் பெற்றோருக்கு குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். திரில்லர் கதைகளை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். நடிகர்-நடிகைகளின் எதார்த்த நடிப்பாலும், சினிமா கலைஞர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே இந்த படம் தயாராகி இருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here