இன்றையை பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை கொடுங்கள். மிலிட்டரி தீர்வை கொடுக்க முயலாதீர்கள். வரலாற்றில் இருந்து பாடம் படியுங்கள என நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ள மனோ கணேசன் எம்.பி. புது பிரதமருக்கும், சபை முதல்வருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இருவரும் கொழும்புகாரர்கள் என்பதில் எனக்கு மேலதிக மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.

அற்கு மேலும் உரையாற்றிய போது,

இதோ, இந்த தருணத்தில் சபையில் வந்தமரும் மகிந்த ராஜபக்ச, 2009ம் வருடம் முடித்து விட்டதாக அன்று சொன்ன, பயங்கரவாதம், இன்று மீண்டும் திடீரென எங்கிருந்து வந்தது என தெரியவில்லை.

1970-80 களில் தமிழ் இளைஞர், தமிழ் மக்கள் தமது நியாயமான எதிர்பார்ப்புகளுக்காக ‘அரகலய’ என்று போராடினார்கள். முதலில் அமைதி போராட்டம்..! பின்புதானே ஆயுத போராட்டம்..? அவற்றுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசுகள் மிலிட்டரி பலத்தை பாவித்தார்கள். அப்போது அதற்கு எதிராக தமிழ் எம்.பிகள் ஆற்றிய உரைகளைதான் இன்று நான் உங்களிடமிருந்து நான் கேட்கிறேன்.

Let us go for a political solution.  இறங்கிருந்தபடி நான் அமைச்சர் விஜேதாசவிடம் கேட்டேன். எங்கே உங்கள் ‘அரசியலமைப்பு திருத்த ஆவணம்’ என்று கேட்டேன். அதுதான் அரசியல் தீர்வு என்றார்.