இன்றைய நாளில் உங்கள் ராசியில்…?

0
216

மேஷம் : அசுவினி: முயற்சிகள் வெற்றியாகும் நாள். தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.
பரணி: தொழிலில் உண்டான தடைகளை சரி செய்வீர்கள். முயற்சியில் அனுகூலம் காண்பீர்கள்.
கார்த்திகை 1: குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.
ரோகிணி: புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினரின் பாராட்டை பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: பிறரது பலம், பலவீனத்தை தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். செல்வாக்கு உயரும் நாள்.
திருவாதிரை: விருப்பப்படி செயல்பட்டு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் புதிய பாதை புலப்படும்.
பூசம்: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: எதிர்பார்த்த செய்தி வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும்.

சிம்மம்: மகம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.
பூரம்: தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும்.
உத்திரம் 1: ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த வரவு உண்டு. நிதிநிலை உயரும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
அஸ்தம்: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். குரு அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
சித்திரை 1, 2: தொழிலை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும்.

துலாம் : சித்திரை 3, 4: திடீர் செலவுகள் ஏற்பட்டு பணத்தேவை அதிகரிக்கும். போராடி சமாளிப்பீர்கள்.
சுவாதி: பயணத் திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் கவனக்குறைவால் செலவுகளை சந்திப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுத்தொழிலில் சங்கடத்தை சந்திப்பீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4: இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும்.
அனுஷம்: பிரபலங்களின் துணையுடன் வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். சிக்கல் தீரும்.
கேட்டை: விரும்பியதை இன்று அடைவீர்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.

தனுசு : மூலம்: தொழிலில் உண்டான நஷ்ட நிலைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும்.
பூராடம்: வேலை தேடி வந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்.
உத்திராடம் 1: பணியாளர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: தடைகளை விலக்கி முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: பணியிடத்தில் உண்டான சங்கடங்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
சதயம்: மனதிற்கு சங்கடம் உண்டாகும் வகையில் சில செயல்கள் நடந்தேறும்.
பூரட்டாதி 1, 2, 3: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

மீனம் : பூரட்டாதி 4: தடைபட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும். எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.
உத்திரட்டாதி: நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும்.
ரேவதி: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை தீரும். எதிர்பாராத வரவு உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here