இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 16.08.2022

0
223

மேஷம்: அசுவினி : வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பயணத்தால் நன்மை ஏற்படும்.
பரணி : அரசுவழி முயற்சியில் இழுபறி ஏற்பட்டாலும் போராடி முடிப்பீர்கள். விழிப்புணர்வான நாள்.
கார்த்திகை 1 : நேற்றைய இழுபறி இன்று முடிவிற்கு வரும். நண்பர்களால் செலவு ஏற்படும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : செயல்களில் வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.
ரோகிணி : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று உங்களை வந்து சேரும். எதிரி விலகிச் செல்வார்.
மிருகசீரிடம் 1, 2: உங்களின் திறமை இன்று வெளிப்படும்.தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய முறைகளை கையாள்வீர்கள்.
திருவாதிரை : உங்கள் செயல்பாடு வெற்றியாகும். தொழிலில் போட்டியாளர் விலகுவார்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பிள்ளைகள் குறித்த சிந்தனை மேலோங்கும். பணவரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3 : செயல்களில் இழுபறி இருக்கும். தந்தை வழி உறவினர்களால் உதவி கிடைக்கும்.
பூசம் : போட்டிகளில் வெற்றி பெறுவீர். உங்களுடைய திறமையால் குடும்பம் உற்சாகத்தில் திளைக்கும்.
ஆயில்யம் : உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.உங்களுடைய எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்: மகம் : எதிரிகளால் மனச்சங்கடம், செயல்களில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
பூரம் : எதிலும் நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டு. விழிப்புணர்வான நாள்.
உத்திரம் 1 : தீவிர ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனஎழுச்சி உண்டாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்களை விட்டு விலகியவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள்.
அஸ்தம் : உங்களுடைய அணுகுமுறையால் நீங்கள் ஈடுபடும் செயலில் ஆதாயம் காண்பீர்கள்.
சித்திரை 1, 2 : இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி வெற்றிபெறும்.

துலாம்: சித்திரை 3, 4 : தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். அதிகமாக யாரையும் நம்ப வேண்டாம்.
சுவாதி: புதிய செயல் மனநிம்மதிக்கு வழிவகுக்கும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: நீங்கள் நினைத்தை செயல்படுத்துவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு.

விருச்சிகம்: விசாகம் 4 : நெருக்கமானவர்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு சரியாகும். எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள்.
அனுஷம் : புதிய செயல் இழுபறியாகும். இன்று நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
கேட்டை : அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி ஒன்று நிறைவேறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு: மூலம் : தேவையற்ற பயம் வந்து போகும். அரசு வழியில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
பூராடம் : நெருக்கமானவர்களின் ஆதரவினால் உங்களுடைய விருப்பம் நிறைவேறும்.
உத்திராடம் 1 : நெருக்கமானவர்களே உங்களுக்கு தவறான வழிகளைக் காட்டலாம். எச்சரிக்கை தேவை.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். தொழிலில் கணிசமான லாபம் காண்பீர்கள்.
திருவோணம் : உயர்ந்தோரின் நட்பினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு வழியில் நன்மை உண்டு.
அவிட்டம் 1, 2 : வி.ஐ.பி.களின் சந்திப்பால் உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : பேச்சில் நிதானம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
சதயம் : கவனக்குறைவால் நஷ்டங்களை சந்திக்கலாம். பிறருக்கு ஆதரவு கொடுப்பதால் அவமானம் ஏற்படும்.
பூரட்டாதி 1, 2, 3 : செயல்களில் சிறு சங்கடம் வரும். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்: பூரட்டாதி 4 : உங்கள் மனம் அலைபாயும். ஒரு செயலில் முடிவிற்கு வராமல் குழப்பமடைவீர்கள்.
உத்திரட்டாதி : உங்கள் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. யாரிடமும் எதனையும் எதிர் பார்க்காதீர்கள்.
ரேவதி : உத்தியோகம், தொழில்களில் பிறரால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here