இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 18.08.2022

0
236

மேஷம் : அசுவினி : உங்கள் செயலில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பரணி : திட்டமிட்டிருந்த வேலை மனம் மகிழக் கூடிய அளவில் முடிவிற்கு வரும். கார்த்திகை 1 : சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். அதிர்ஷ்டமான நாள்.

ரிஷபம்: கார்த்திகை 2இ 3இ 4 : தவறான நபர்களின் நட்பினால் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரும். ரோகிணி : செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி குறித்து பேச்சு எழும். மிருகசீரிடம் 1இ 2: வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3இ4 : குடும்பத்தில் உண்டான நெருக்கடி விலகும். நண்பர்களின் உதவியால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவாதிரை : தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடு ஆதாயத்தை ஏற்படுத்தும். புனர்பூசம் 1இ 2இ 3 : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 1இ 2இ 3 : தொழிலை விருத்தி செய்யும் முயற்சி வெற்றியாகும். பூசம் : முயற்சி ஒன்றில் முன்னேற்றம் காண்பீர்கள். இழுபறியாக இருந்தவற்றில் மாற்றம் உண்டாகும். ஆயில்யம் : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி பலிக்கும்.

சிம்மம்: மகம் : முக்கியமான செயல் முடிவிற்கு வராமல் தடுமாறுவீர்கள். வேலையில் தயக்கம் ஏற்படும். பூரம் : பிரச்னை ஒன்று உங்களை சங்கடப்படுத்தும். எந்தவொரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் திணுறுவீர்கள். உத்திரம் 1 : எதிரிகளால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2இ 3இ 4 : மனதில் பதட்டம் அதிகரிக்கும். உறவு வழியில் சங்கடத்தை சந்திப்பீர்கள். அஸ்தம் : அலைச்சல் அதிகரித்தாலும் உடல் சோர்வடையும். எதிர்பார்த்த லாபத்தில் தடை ஏற்படும். சித்திரை 1இ 2: நீங்கள் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போகும். வழக்குகளில் கவனம் செலுத்தவும்.

துலாம்: சித்திரை 3இ 4 : நண்பர்களின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். நினைத்ததை நினைத்தபடி சாதிப்பீர்கள். சுவாதி : உங்களுடைய அறிவாற்றல் இன்று வெளிப்படும். தடைபட்டிருந்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விசாகம் 1இ 2இ 3 : குறுக்கு வழியில் லாபம் அடைய ஒரு சிலர் வழிகாட்டலாம். சிக்கல்களுக்கு ஆளாகாதீர்.

விருச்சிகம்: விசாகம் 4 : உங்களுக்கு உற்சாகம் ஏற்படும். விலகிச்சென்ற உறவினர் உங்களைத் தேடி வருவர்.
அனுஷம் : மறைமுக எதிர்ப்புகள் சரியாகும். முக்கிய வேலையாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். கேட்டை : புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு எழும்.

தனுசு: மூலம் : நீங்கள் எதிர்பார்த்த நன்மையை உங்களால் காண முடியாமல் போகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். பூராடம் : உங்கள் உறவினர் ஒருவரிடம் பிரச்னை ஏற்பட்டு அதன் வழியே சங்கடம் அடைவீர்கள்.
உத்திராடம் 1 : உங்கள் மன நிலையை பாதிக்கும் வகையில் சில நிகழ்வு நடைபெறும்.

மகரம்: உத்திராடம் 2இ 3இ 4 : தங்களுடைய பணியில் கவனமுடன் செயல்படுவீர்கள். நேர்மையால் நன்மை உண்டாகும். திருவோணம் : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். அதில் குழப்பம் உண்டாகும். அவிட்டம் 1இ 2: அரசு விவகாரத்தில் இழுபறி ஏற்படும். உங்களுடைய முயற்சி இன்று மாலை நிறைவேறும்.

கும்பம்: அவிட்டம் 3இ 4 : நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தினர் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். சதயம் : உங்களுடைய செல்வாக்கு உயரும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். பூரட்டாதி 1இ 2இ 3 : குடும்பத்திற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலில் இருந்து வந்த தடை நீங்கும்.

மீனம்: பூரட்டாதி 4 : வேலை விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அதனால் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி : உற்சாகத்துடன் செயலை ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொல்லை கொடுத்தவர் ஆச்சரியப்படுவார்கள். ரேவதி : குடும்பத்தினர் உங்களுடைய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பர். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here