மேஷம்: அசுவினி : இன்று மகிழ்ச்சியான நிலை நீடிக்கும். குடும்பத்திற்காக செலவுகளை மேற்கொள்வீர்கள்.
பரணி : விருந்து விசேஷம் என செல்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். எதிர்பாராத செலவு உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : செலவுகள் கட்டுப்படும். உங்கள் மனதிற்குப் பிடித்தவற்றில் ஈடுபடுவீர்கள்.
ரோகிணி : உடலும் மனமும் மகிழும் வகையில் இன்றைய பொழுது அமையும். நண்பர்கள் தேடி வருவர்.
மிருகசீரிடம் 1, 2 : உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்தி வீடு தேடி வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : வரவு ஏற்ற செலவுகளை சந்திப்பீர்கள். நினைத்த செயலை உறுதியுடன் முடிப்பீர்கள்.
திருவாதிரை: புதிய சிந்தனைகள் மேலோங்கும். மதியம் வரை சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3 : முயற்சிகளில் வேகம் உண்டாகும். மதியத்திற்கு மேல் வியாபாரத்தில் பணம் அதிகரிக்கும்.
பூசம் : தொழிலில் புதிய யுக்தியைக் கையாள்வீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : வி.ஐ.பி.களின் சந்திப்பு லாபத்தை உண்டாக்கும். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும்.

சிம்மம்: மகம் : உங்களுடைய செயல்களில் இழுபறி உண்டாகும். ஆன்மிக விருப்பம் நிறைவேறும்.
பூரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். மதியத்திற்குமேல் நண்பர்கள் விரும்பி வருவார்கள்.
உத்திரம் 1: குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : இன்று உங்களது மனம் படபடப்பாகவே இருக்கும். நிம்மதி தேவையான நாள்.
அஸ்தம் : மதியத்திற்கு மேல் உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
சித்திரை 1, 2: நேற்று இருந்து வந்த சங்கடம் விலகும். பெரியவர்களால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4 : இன்று உங்கள் செயல் வெற்றியாகும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சுவாதி : எதிர்பாராத பிரச்னைகளை இன்று சந்திப்பீர்கள். மற்றவர்களின் தொந்தரவால் மனம் அவதிப்படும்.
விசாகம் 1, 2, 3 : குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்: விசாகம் 4: தம்பதிகளிடம் இருந்து வந்த பிரச்னை விலகும். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.
அனுஷம் : குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடம் மறையும்.
கேட்டை : நேற்றைய செயல் ஒன்று நிறைவேறும். பெற்றோர்கள் பெருமிதம் அடைவார்கள்.

தனுசு: மூலம் : இழுபறியாக இருந்து வந்த வேலை முடியும். மறைமுகத் தொல்லை விலகும்.
பூராடம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். தொழிலில் லாபம் காண்பீர்கள்.
உத்திராடம் 1: உங்களுடைய திறமை வெளிப்படும். குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பீர்கள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.
திருவோணம் : திட்டமிட்டு செயல்படுவதால் உங்களுக்குத் தேவையான ஒன்றை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினரின் ஆலோசனைகளால் உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : மதியம் வரை உங்களுடைய செயல்களில் வேகம் இருக்கும். தொழிலில் நிதானம் தேவை.
சதயம் : முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
பூரட்டாதி 1, 2, 3 : தாய்வழி உறவினர் ஒருவர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4 : உங்களுடைய செயல்களில் தீவிரம் காட்டுவீர்கள். நிதி நிலையை சீராகும்.
உத்திரட்டாதி : குடும்பத்தினரின் தேவையறிந்து செயல்படுவீர்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும்.
ரேவதி : விருந்து விசேஷம் என சென்று வருவீர்கள். புதிய முயற்சி வெற்றி பெறும்