மேஷம்: அசுவினி: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
பரணி: ஒரு முயற்சி லாபமாகும். குடும்பத்தில் நெருக்கடி, மறைமுகத் தொல்லைகள் விலகும்.
கார்த்திகை 1: நீண்ட நாள் இழுபறியாக இருந்த செயல் வெற்றியாகும். பணவரவால் மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த செயலில் இழுபறி ஏற்படும். முன்யோசனையுடன் செயல்படுங்கள்.
ரோகிணி: குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வரலாம். அலுவலகத்தில் உங்களை மற்றவர் பாராட்டுவர்.
மிருகசீரிடம் 1, 2: சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தாய்வழி உறவால் நன்மை சேரும். குடும்பத்தேவை நிறைவேறும். நிதானம் தேவை.
திருவாதிரை: மனம் அலைபாயும். நண்பர் ஆதரவுடன் உதவுவார்கள். முயற்சி நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அரசுவழி முயற்சி தாமதமாகும்.

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி உங்களுக்கு நன்மையாகும்.
பூசம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தந்தை வழியில் ஆதரவு உண்டாகும்.
ஆயில்யம்: விலகிய சகோதரர் தேடி வருவர். முயற்சி வெற்றி பெறும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்: மகம்: பேச்சில் கவனம் தேவை. கவனக் குறைவால் இன்று சில இழப்புகளை சந்திப்பீர்கள்.
பூரம்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் தள்ளிப்போன செயல்கள் முடியும்.
உத்திரம் 1: பணியித்தில் உண்டான பிரச்னையை சரிசெய்வீர்கள். பணம் பல வழிகளில் செலவாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: சாதகமான நிலை உருவாகும். பணவரவு திருப்தி தரும். வீட்டில் சலசலப்பு ஏற்படும்.
அஸ்தம்: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார. புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.
சித்திரை 1, 2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். குழப்பம் விலகும்.

துலாம்: சித்திரை 3, 4: அலைச்சல் கூடும். சிலர் வெளியூர் பயணம் செல்வர். எதிர்பாராத செலவு ஏற்படும்.
சுவாதி: வீடு, வாகன வகையில் செலவு ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தடைபடும். நண்பரால் சங்கடம் வரலாம்.
விசாகம் 1, 2, 3: செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். பய உணர்வால் முயற்சியில் கவனம் தேவை.

விருச்சிகம்: விசாகம் 4: தனித்திறனால் உங்களுடைய செல்வாக்கு உயரும். பணியில் இருந்த தடை விலகும்.
அனுஷம்: முயற்சி வெற்றி பெறும். திடீர் வரவால் சங்கடங்கள் விலகும். நன்மையான நாள்.
கேட்டை: புதிய முயற்சியில் லாபம் உயரும். பிறரால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள்.

தனுசு: மூலம்: தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
பூராடம்: தொழிலில் மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்குவீர்கள். அரசு வழியில் நன்மை சேரும்.
உத்திராடம் 1: போட்டியாளர்களை சமாளித்து வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு உயரும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: முயற்சிகளில் தாமதம் உண்டானாலும் முடிவு சாதகமாகும். பணவரவு உயரும்.
திருவோணம்: தெய்வ அருளால் முயற்சிகள் இன்று பலிதமாகும். எதிர்பார்த்த ஒன்றை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். பகைவர் செயல்களால் சங்கடம் ஏற்படும்.
சதயம்: குடும்பத்தினரால் சங்கடத்திற்கு ஆளாகலாம். முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
பூரட்டாதி 1, 2, 3: எதிரியின் செயலால் சிரமப்பட நேரிடும். பெரியோர் ஆலோசனை ஆறுதல் தரும்.

மீனம்: பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும். நண்பர் உதவியுடன் செயலை செய்து முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: விருப்பங்கள் நிறைவேறும். மனதை வாட்டிய பிரச்னைக்கு தீர்வு உண்டாகும்.
ரேவதி: எதிர்பார்த்திருந்த வாய்ப்பு உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை உயரும்.