இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 07.07.2022

0
366

மேஷம்: அசுவினி: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.
பரணி: தடைகளை விலக்கி செயல்படுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கார்த்திகை 1: உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். பெற்றோரின் ஆதரவால் நிதிநிலை உயரும்.
ரோகிணி: குடும்பத்தினரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். பிள்ளைகள் வழியே ஆதாயம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த உங்களின் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயத்தை உண்டாக்கும். உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
திருவாதிரை: முயற்சியின் வழியே பலன் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் லாபம் காண்பதற்காக பணியாளர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
பூசம்: பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
ஆயில்யம்: சகோதரர்களின் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

சிம்மம் : மகம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானத்திற்கான முயற்சி லாபமாகும்.
உத்திரம் 1: பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் சென்று விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம்: உங்களது எண்ணம் பூர்த்தியாகும் நாள். நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி அடைவீர்கள்.
சித்திரை 1, 2: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். தொழிலை விரிவு செய்வீர்கள்.

துலாம் : சித்திரை 3, 4: வெளியூர் பயணமும், அலைச்சலும் ஏற்படும். முயற்சிகள் தாமதமாகும்.
சுவாதி: விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினர் வகையில் திடீர் செலவுகள் தோன்றும். போராடி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
அனுஷம்: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு அழைப்பு வரும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.
கேட்டை: விருந்தினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தனுசு : மூலம்: நேற்றைய நிலையே இன்று நீடிக்கும். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.
பூராடம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வருமானம் தடையின்றி வரும்.
உத்திராடம் 1: பணியாளர்கள் தங்களுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.
திருவோணம்: எதிலும் பலமுறை யோசித்து செயல்படுங்கள். அவசர செயல்கள் பிரச்னையில் முடியும்.
அவிட்டம் 1, 2: நிதிநிலை சீராகும். தந்தை வழி உறவினர் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

கும்பம் : அவிட்டம் 3, 4: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். பணிகளிலும் விழிப்புணர்வு அவசியம்.
சதயம்: வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.
பூரட்டாதி 1, 2, 3: பிறரது பிரச்னையில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் வழங்க வேண்டாம்.

மீனம் : பூரட்டாதி 4: உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பியவற்றை அடைவீர்கள்.
உத்திரட்டாதி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
ரேவதி: கவனத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். முயற்சி லாபமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here