மேஷம் : அசுவினி: திட்டமிட்ட செயல்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். யோகமான நாள். பரணி: நண்பர்களின் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
கார்த்திகை 1: கூட்டுத்தொழில் முயற்சி ஆதாயமாகும். நன்மைகள் அதிகரிக்கும் நாள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: எதிர்ப்புகளை சரி செய்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: விஐபிகளின் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி ஆதாயம் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: எதிரிகள் பணிவார்கள். தடைபட்டிருந்த வருவாய் இன்று வந்து சேரும்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும் நாள்.
திருவாதிரை: எதிர்பாராத வருவாய் உண்டு. நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: இரண்டு நாளாக தடைபட்டிருந்த ஒரு முயற்சி இன்று வெற்றியாகும்.

கடகம்: புனர்பூசம் 4: செயல்களில் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், உங்கள் விருப்பம் நிறைவேறும்.
பூசம்: மாற்று இனத்தவர்களின் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்கள்.
ஆயில்யம்: விழிப்புடன் செயல்படுவதால் நன்மைகள் கூடும். விரயங்கள் கட்டுப்படும்.

சிம்மம்: மகம்: மேலதிகாரியின் ஆதரவுடன் நீங்கள் விரும்பிய பணியிட மாற்றத்தை அடைவீர்கள்.
பூரம்: பண வரவு திருப்தி தரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.
உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வருவர்.
அஸ்தம்: திட்டமிட்ட செயல்கள் எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
சித்திரை 1, 2: குருபகவானின் அருளால் சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.

துலாம்: சித்திரை 3, 4: மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும். உங்களின் எண்ணம் நிறைவேறும்.
சுவாதி: குடும்பத்தினரின் தேவையை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலில் ஆதாயம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி நன்மையாகும்.

விருச்சிகம்: விசாகம் 4: வெளியூர் பயணம் வெற்றி தரும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
அனுஷம்: பணியாளர்களில் சிலர் வேறு இடத்திற்கு மாறுதல் கேட்பீர்கள்.
கேட்டை: குரு அருளால் உங்களது எண்ணம் நிறைவேறும். முயற்சியில் ஆதாயம் உண்டாகும்.

தனுசு : மூலம்: தொழில் முன்னேற்றம் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும்.
பூராடம்: நிதி நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் இன்று வந்து சேரும்.
உத்திராடம் 1: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். பகைவர்கள் விலகிச் செல்வர்.
திருவோணம்: பொறாமையாளர்கள் உங்களது முன்னேற்றத்தை கண்டு விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாதீர்.
அவிட்டம் 1, 2: துணிச்சலுடன் செயல்பட்டு எண்ணியதை சாதிப்பீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். நினைத்ததை அடைவீர்கள்.
சதயம்: புதிய முயற்சிகள் நன்மையாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4: செயலில் சங்கடத்தை சந்திப்பீர்கள். சந்திராஷ்டமம் தொடர்வதால் அமைதியைக் கடைபிடியுங்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். கவனம் தேவை.
ரேவதி: செயலில் தடை ஏற்படும். கவனக்குறைவுக்கு இடம் அளிக்காமல் விழிப்புடன் செயல்படவும்.