மேஷம் : அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை தீரும். சேமிப்பு கூடும்.
கார்த்திகை 1: புதிய நண்பர்களிடம் உங்களது ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

ரோகிணி: குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு சுபச்செய்தி வரும்.
மிருகசீரிடம் 1, 2: பழைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமாகும். நினைத்ததை அடைவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த பணவரவு உண்டு. பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.
திருவாதிரை: பணியாளர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: முயற்சியில் இருந்த தடை விலகும். உங்களின் எண்ணம் நிறைவேறும்.

கடகம் : புனர்பூசம் 4: முயற்சிகளில் தடை ஏற்படும். சில சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும்.
பூசம்: குரு அருளால் சிந்தித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டியை சந்தித்தாலும், உங்களது அணுகுமுறையால் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம் : மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர்கள்.
பூரம்: பிறரது விமர்சனத்தை ஒதுக்கி வைத்து செயல்படுவீர்கள். ஆதாயமான நாள்.
உத்திரம் 1: பிறரால் செய்ய முடியாத, செயல் ஒன்றை செய்து வெற்றி பெறுவீர்

கன்னி : உத்திரம் 2, 3, 4: திருமணத்திற்கு வரன் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும்.
அஸ்தம்: வங்கியில் கேட்டிருந்த கடன் வந்து சேரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
சித்திரை 1, 2: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: உங்களது கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும்.
சுவாதி: செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: உங்களை விட்டு விலகிச் சென்றவர்களை தேடிச்சென்று சமாதானம் செய்வீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4: வரவுகள் அதிகரிக்கும் என்றாலும், திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர்கள்.
அனுஷம்: உழைப்பின் வழியே செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள்.
கேட்டை: புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு : மூலம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடனை அடைப்பீர்கள்.
பூராடம்: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களது முயற்சிக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர்.
உத்திராடம் 1: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும்.
திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக நீங்கள் எதிர்பார்த்த தொகை இன்று வந்து சேரும்.
அவிட்டம் 1, 2: உங்களின் அணுகுமுறையால் நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள்

கும்பம் : அவிட்டம் 3, 4: புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
சதயம்: சிரமம் அதிகரித்தாலும் உங்களது முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: வரவேண்டிய பணம் இன்று மொத்தமாக வந்து சேரும்.

மீனம்: பூரட்டாதி 4: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். செயல்கள் தாமதமாகும்.
உத்திரட்டாதி: பயணத்தை தவிர்ப்பது நல்லது. பணிகளில் கவனமுடன் செயல்படவும்.
ரேவதி: உங்களது கவனக்குறைவால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.