மேஷம்: அசுவினி : எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். முயற்சியில் முன்னேற்றம் காணப்படும்.
பரணி : நண்பர்களின் உதவியுடன் உங்கள் செயல் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
ரோகிணி : புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : திட்டமிட்ட செயல் லாபமாகும். எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : முயற்சிகளில் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
திருவாதிரை : அலைச்சல் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் குழப்பத்தை சந்திப்பீர்கள். அமைதி காப்பது நல்லது.

கடகம் : புனர்பூசம் 4 : பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம் : பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும்.
ஆயில்யம் : இன்று பெரியோரின் ஆலோசனையால் உங்களுக்கு நன்மை உண்டாக்கும்.

சிம்மம்: மகம் : வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். பண வரவு உண்டு.
பூரம் : பகைவரின் தொல்லை நீங்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
உத்திரம் 1 : புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு உண்டு.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : எடுத்த முயற்சியில் வெற்றி காணும் நாள். எதிர்பார்த்தவை அனுகூலமாகும்.
அஸ்தம் : தொழிலில் இருந்து வந்த தடை விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள்.
சித்திரை 1, 2 : நண்பர்களின் துணையுடன் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

துலாம் : சித்திரை 3, 4 : நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். சில செயல் இழுபறியாகும்.
சுவாதி : அரசு வழியிலான முயற்சி தள்ளிப்போகும். கோபத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
விசாகம் 1, 2, 3 : பணியிடத்தில் கூடுதல் கவனம் தேவை. அன்பளிப்பு பெறுவதை தவிர்க்கவும்

விருச்சிகம் : விசாகம் 4 : எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பயணத்தால் நன்மை உண்டு.
அனுஷம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கேட்டை : குடும்பத்தினரின் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி ஒன்று நிறைவேறும்.

தனுசு : மூலம் : வசிக்கும் இடத்தை மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். நிதி நிலை சீராகும்.
பூராடம் : வருமானத்தில் ஏற்பட்ட தடை அகலும். தொழிலில் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்திராடம் 1 : தம்பதிக்குள் இருந்து வந்த பிரச்னை விலகும்.கோவிலுக்கு செல்வீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : உறவினர் ஒருவர் வீடு தேடி வருவர். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
திருவோணம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 : நேற்று வரவேண்டிய பணம் இன்று வந்து சேரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : நிதானமாகப் பேசி நன்மை அடைய வேண்டிய நாள். எச்சரிக்கை அவசியம்.
சதயம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய அறிகுறி தோன்றும்.
பூரட்டாதி 1, 2, 3 : தொழிலில் எதிர்பார்த்த நன்மை தள்ளிப்போகும். செலவு அதிகரிக்கும்.

மீனம் : பூரட்டாதி 4 : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.
உத்திரட்டாதி : அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ரேவதி : பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும் நாள்.