இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 23.07.2022

0
338

மேஷம் : அசுவினி: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
பரணி: நண்பர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேரும்.

கார்த்திகை 1: குடும்பத்தினர் விருப்பப்படி சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: எண்ணம்போல் செயல்படுவீர்கள். நீண்டநாள் முயற்சி நிறைவேறும்.
ரோகிணி: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மனதிலுள்ள எண்ணம் பூர்த்தியாகும்.
மிருகசீரிடம் 1, 2: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: நிதானமாகச் செயல்பட்டு நன்மை அடைவீர்கள். செலவு அதிகரிக்கும்.
திருவாதிரை: குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். நவீன பொருள் வாங்குவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணம் நன்மையைத் தரும்.

கடகம்: புனர்பூசம் 4: வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
ஆயில்யம்: நட்பு வட்டம் விரிவடையும். அவர்களால் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம் : மகம்: பணியாளர்களுக்கு அதிகாரி ஆதரவுடன் எதிர்பார்ப்பு ஒன்று பூர்த்தியாகும்.
பூரம்: உங்கள் கோரிக்கை நிறைவேறும். நிதிநிலை உயரும். லாபமான நாள்.
உத்திரம் 1: தொழிலில் இருந்த தடை விலகும். உங்கள் செயலால் லாபம் உயரும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
அஸ்தம்: குடும்ப நலனுக்காக மேற்கொண்ட ஒரு முயற்சி நிறைவேறும்.
சித்திரை 1, 2: தீராமல் இருந்த ஒரு பிரச்சினை நண்பர்களின் உதவியுடன் இன்று முடிவிற்கு வரும்.

துலாம் : சித்திரை 3, 4: ஆவலுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். குழப்பம் அதிகரிக்கும்.
சுவாதி: மனதிற்கு சங்கடமான செயல்களை சந்திப்பீர்கள். அமைதி காப்பது நன்மையாகும்.
விசாகம் 1, 2, 3: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4: நண்பர்களின் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
அனுஷம்: திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வீடு தேடி வரும்.
கேட்டை: தொழில் முயற்சி லாபம் தரும். உங்கள் ஆலோசனையை நண்பர் ஏற்பர்.

தனுசு : மூலம்: உங்கள் திறமை வெளிப்படும் நாள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூராடம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதற்குரிய வாய்ப்பு ஏற்படும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.
அவிட்டம் 1, 2: பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணம் வந்து சேரும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்கள்.
சதயம்: செயலில் தடுமாற்றம் ஏற்படும். கவனக்குறைவால் இழப்பை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: உறவினர்களால் குழப்பம் உண்டாகும். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்: பூரட்டாதி 4: இருப்பிடத்தை மாற்றம் செய்ய நினைப்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.
உத்திரட்டாதி: கோயில் தரிசனத்திற்காக பயணம் செல்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here