மேஷம் : அசுவினி: எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும். புதிய நட்புகளால் ஆதாயம் அடைவீர்கள்.
பரணி: தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நினைத்தவை நடந்தேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: மனதில் பல்வேறு சிந்தனைகள் உருவாகும். சிந்தித்து செயல்பட வேண்டும்.
ரோகிணி: செயல்களில் கவனம் தேவை. மற்றவரை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டு.
மிருகசீரிடம் 1, 2: சகபணியாளர்களுடன் மோதல் நிலை உண்டாகலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சல் கூடும். எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
திருவாதிரை: ஆடம்பர செலவுகள் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் போகும்.
புனர்பூசம் 1, 2, 3: புதிய முதலீடுகள் வேண்டாம். முயற்சிகள் இழுபறியாகும் என்பதால் நிதானம் தேவை.

கடகம் : புனர்பூசம் 4: உங்களின் செல்வாக்கு உயரும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.
பூசம்: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வரவு முன்பைவிட அதிகரிக்கும்.
ஆயில்யம்: பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பரின் உதவியால் நினைத்ததை அடைவீர்கள்.

சிம்மம்: மகம்: புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
பூரம்: பணியிடத்தில் உங்களின் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: பழைய அனுபவங்களைக் கொண்டு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
அஸ்தம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: பழைய பாக்கிகள் வசூலாகி குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

துலாம் : சித்திரை 3, 4: பிறருடன் அனுசரித்து செல்வதால் சில நன்மைகளை அடையலாம்.
சுவாதி: பணியிடத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
விசாகம் 1, 2, 3: செயல்களில் தடுமாற்றம் அதிகரிக்கும். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்

விருச்சிகம் : விசாகம் 4: நண்பர்களின் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். யோகமான நாள்.
அனுஷம்: புதிய முயற்சிகள் வெற்றியாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த முரண்பாடு நீங்கும்.
கேட்டை: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்களின் அணுகுமுறையால் ஆதாயம் காண்பீர்கள்.

தனுசு : மூலம்: அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும்.
பூராடம்: மற்றவர்களால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: உங்களின் திறமை வெளிப்படும் நாள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
திருவோணம்: சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். உங்களின் நிதிநிலை உயரும்.
அவிட்டம் 1, 2: தொழிலை விரிவு செய்வீர்கள். வருமானம் கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: திட்டமிட்ட செயலில் கவனம் செலுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சதயம்: மறைமுக எதிர்ப்புகளைக் கண்டறிந்து, எச்சரிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: உழைப்பில் கவனம் செல்லும். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

மீனம்: பூரட்டாதி 4: தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்.
உத்திரட்டாதி: பொறுப்புகள் கூடும். உங்களின் திறன் வெளிப்படும். அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.
ரேவதி: விஐபிகளின் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும்.