மேஷம்: அசுவினி: நண்பர்களின் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
பரணி: எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று வரும். உங்களின் எண்ணம் ஈடேறும் நாள்.
கார்த்திகை 1: உறவினரால் ஏற்பட்ட சங்கடம் தீரும். தடைபட்ட செயல்கள் நிறைவேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: சகபணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும்.
ரோகிணி: நீண்ட நாளாக தள்ளிப்போன செயல் ஒன்று நிறைவேறும். யோகமான நாள்.
மிருகசீரிடம் 1, 2: குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். பொன், பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். நினைத்ததை முடிப்பீர்கள்.
திருவாதிரை: உங்களுக்கு மறைமுகத் தொல்லை கொடுத்து வந்தவர்களை கண்டறிவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவீர்கள். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் காண்பீர்கள்.
பூசம்: உங்களது அறிவாற்றல் வெளிப்படும். தடைப்பட்ட செயல்களை முடிப்பீர்கள்.
ஆயில்யம்: சிந்தித்து செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

சிம்மம் : மகம்: செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகிழ்ச்சி கூடும்.
பூரம்: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டு.
உத்திரம் 1: அலைச்சல் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். புதிய வேலை வாய்ப்பு முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: எதிர்பார்த்த வரவு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்வீர்கள்.
சித்திரை 1, 2: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியாகும்.

துலாம் : சித்திரை 3, 4: முயற்சிகள் இழுபறியாகும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் மாறக்கூடும்.
சுவாதி: பிறரை அனுசரித்து சென்று ஆதாயம் அடையும் நாள். கோபத்தை தவிர்க்கவும்.
விசாகம் 1, 2, 3: தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.

விருச்சிகம் : விசாகம் 4: உங்களுடைய பணிகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். யோசித்து செயல்படவும்.
அனுஷம்: முயற்சிகள் வெற்றியாகும். நீங்கள் விரும்பியவற்றை அடைவீர்கள்.
கேட்டை: மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். உங்களின் எண்ணம் நிறைவேறும்.

தனுசு : மூலம்: உங்களது செயல்களில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். விழிப்புடன் செயல்படவும்.
பூராடம்: உங்களுடைய ஆதரவாளர்களும் எதிராவார்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: புதிய முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
திருவோணம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களின் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: உங்களை விமர்சனம் செய்தவர்களும் பாராட்டும் நிலை உண்டாகும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தடைகள் விலகும்.
சதயம்: வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் உங்களது எண்ணத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த செயல்கள் இன்று முடிவிற்கு வரும்.

மீனம் : பூரட்டாதி 4: குடும்பத்தில் சில சலசலப்புகள் உண்டாகும். பேச்சில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். பழைய இருப்பிடத்தை மாற்றி அமைப்பீர்கள்.
ரேவதி: புதிய வாகனம் வாங்குவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.