இன்றைய நாள் உங்களுக்கு ராசியானதா? – 15.06.2022

0
311

மேஷம் : அசுவினி : இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும்.
பரணி : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.
கார்த்திகை 1 : தடைபட்டிருந்த வேலை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். மனதில் தேவையற்ற சங்கடம் உண்டாகும்.
ரோகிணி : புதிய முயற்சிகள் இன்று கை கொடுக்காமல் போகும். உங்கள் திறமைக்கு சவாலான நாள்.
மிருகசீரிடம் 1, 2 : உத்தியோகத்தில் திடீரென்று பிரச்னை தோன்றும். மற்றவர்களிடம் பேசும்போது கவனம் தேவை.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவாதிரை : வியாபாரத்தில் ரகசியம் புலப்படும். லாபத்திற்குரிய வழியை காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.

கடகம் : புனர்பூசம் 4 : பணம் தொடர்பாக ஏற்பட்ட தடை விலகும். அரசு வழியிலான நன்மை உண்டாகும்.
பூசம் : பணியிடத்தில் உங்கள் செயல்களுக்கு வரவேற்பு உண்டாகும். எதிர்பாராத வரவு வரும்.
ஆயில்யம் : உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிம்மம் : மகம் : தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். புதிய தொடர்புகளால் முன்னேற்றம் ஏற்படும்.
பூரம் : குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
உத்திரம் 1 : குடும்ப சொத்தில் இருந்த பிரச்னை தீரும். உங்களுடைய முயற்சி பலிதமாகும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : தாய்வழி உறவுகளால் லாபம் அடைவீர்கள். பெரியவர்கள் சந்திப்பால் நன்மை ஏற்படும்.
அஸ்தம் : சுபச்செய்தி வீடு தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணியிடத்தில் வெற்றி உண்டாகும்.
சித்திரை 1, 2: திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

துலாம் : சித்திரை 3, 4: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். .உங்கள் உயர்ந்த எண்ணம் இன்று நிறைவேறும்.
சுவாதி : வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிதிநிலையை உயர்த்துவீர்கள்.
விசாகம் 1, 2, 3 : அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும். யோகமான நாள்.

விருச்சிகம் : விசாகம் 4: உங்களை விட்டு விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள்.
அனுஷம் : கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை மறையும். மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : தடைபட்டிருந்த செயல் முடிவிற்கு வரும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு : மூலம் : உங்கள் பிரச்னையை மற்றவர்களிடம் கொண்டு செல்ல வேண்டாம். கடவுள் அருளால் நன்மை உண்டாகும்.
பூராடம் : உங்களை சீண்டிப் பார்க்க சிலர் முயற்சிப்பார்கள். அமைதியை இழக்காதீர்கள்.
உத்திராடம் 1 : சிரமத்திற்கு உள்ளாக வேண்டாம். அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: செலவுகளால் உங்கள் இருப்பு கரைக்கும். பரபரப்பான நாள்.
திருவோணம் : உங்கள் வரவை விட செலவு அதிகரிக்கும். கடன் கொடுத்தவர் நெருக்கடியை ஏற்படுத்துவர்.
அவிட்டம் 1, 2 : உங்கள் செயலை போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். விழிப்புணர்வு தேவை.

கும்பம் : அவிட்டம் 3, 4 : இன்று மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். லாபகரமான நாள்.
சதயம் : புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உத்தியோகத்தில் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். செல்வாக்கு உயரும்.

மீனம் : பூரட்டாதி 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : உங்களுடைய நீண்ட நாள் எண்ணம் ஒன்று நண்பர்களால் இன்று நிறைவேறும்.
ரேவதி : சுப நிகழ்ச்சிகளை முன்நின்று நடத்துவீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here