இன்றைய நாள் உங்களுக்கு ….01.08.2022

0
347

மேஷம்: அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பிள்ளைகளால் நன்மை உண்டு.
பரணி: பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உறவினர்களால் உதவி உண்டாகும்.
கார்த்திகை 1: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை அகலும்.
ரோகிணி: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் கூடும்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்த்த வரவு கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தடைகளை சரி செய்து வெற்றி அடைவீர்கள் உங்கள் செயல் லாபமாகும்.
திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சி ஆதாயமாகும்.
புனர்பூசம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்பட்டு எண்ணத்தை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

சிம்மம் : மகம்: மனதில் குழப்பத்திற்கு இடமளிக்காதீர்கள். திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும்.
பூரம்: வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
உத்திரம் 1: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அதுவே நல்லது.

கன்னி : உத்திரம் 2, 3, 4: பணத்தட்டுப்பாட்டின் காரணமாக முயற்சிகள் இழுபறியாகும். சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம்: தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண முடியாமல் போகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும்.
சித்திரை 1, 2: பணியிடத்தில் சகஊழியர்களால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கவனமுடன் செயல்படுங்கள்.

துலாம் : சித்திரை 3, 4: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.
சுவாதி: பணியாளர்கள் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் செல்வாக்கு உயரும்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்

விருச்சிகம்: விசாகம் 4: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அனுஷம்: தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பழைய கடன் ஒன்றை அடைப்பீர்கள்.

தனுசு: மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களின் மதிப்பு உயரும்.
பூராடம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவினர்கள் உங்கள் உதவியை எதிர்பார்த்து வருவார்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: உங்களுக்கு உதவி செய்வதாக சொன்னவர்களை சந்திக்க முடியாமல் போகும்.
திருவோணம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
அவிட்டம் 1, 2: வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். பொறுமைக் காப்பது நல்லது.

கும்பம் : அவிட்டம் 3, 4: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். நினைத்ததை சாதிக்கும் நாள்.
சதயம்: தம்பதி இடையே ஒற்றுமை கூடும். உங்கள் திறமையால் எண்ணியதை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.

மீனம்: பூரட்டாதி 4: பணியிட பிரச்னை தீரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.
உத்திரட்டாதி: நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள்.
ரேவதி: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here