இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி?

0
234

மேஷம்: அசுவினி : எதிர்பார்த்த பணம் உங்களிடம் வந்து சேரும். புதிய முயற்சிக்கு பலன் கிடைக்கும்.
பரணி : தள்ளிப்போன செயல் இன்று நிறைவேறும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
கார்த்திகை 1: உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : வெளியிடத்தில் இருந்து வர வேண்டிய தொகை வந்து சேரும்.
ரோகிணி : நேற்று நினைத்த செயலை இன்று நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: பணியிடத்தில் மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். நிம்மதியான நாள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : உங்கள் செயலில் திடீர் சங்கடம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
திருவாதிரை : மனதில் குழப்பம் உண்டாகும்,தொழிலில் கவனம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3 : திடீர் பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். பரபரப்பான நாள்

கடகம் : புனர்பூசம் 4 : குடும்ப உறவினர் மூலம் தள்ளிப்போன சுப நிகழ்வை நடத்த முன்வருவீர்கள்.
பூசம் : நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மன நிம்மதி காணும் நாள்.
ஆயில்யம் : வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விரும்பி வாங்குவீர்கள்

சிம்மம் : மகம் : உங்களுடைய செல்வாக்கு இன்று பொது இடத்தில் கூடும். மகிழ்ச்சியான நாள்.
பூரம் : நேற்றைய குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
உத்திரம் 1 : உடல் நிலையில் இருந்து வந்த சங்கடம் குறையும். தொழிலில் நீடித்த தடை நீங்கும்..

கன்னி : உத்திரம் 2, 3, 4 : குரு அருளால் உங்கள் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : உறவினர்கள் உதவியுடன் நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி காண்பீர்கள்.
சித்திரை 1, 2 : எதிர்பாராத பணம் வந்து உங்கள் பொருளாதார நிலையை சரி செய்யும். மன நிம்மதி ஏற்படும்.

துலாம் : சித்திரை 3, 4 : உங்கள் பலம் இன்று மற்றவர்களுக்கு தெரியவரும். முயற்சிகளில் ஆதாய நிலை தோன்றும்.
சுவாதி : ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: தொழிலில் உங்கள் முயற்சிகளுக்கேற்ப இன்று லாபம் காண்பீர்கள். மனதை ஒருநிலைப்படுத்தவும்.

விருச்சிகம் : விசாகம் 4 : உங்களுடைய நேற்றைய எண்ணம் இன்று நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். யோகமான நாள்.
கேட்டை : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் விரும்பியவற்றில் இன்று வெற்றி காண்பீர்கள்.

தனுசு : மூலம் : இன்று பணம் நகைகளைக் கையாளுவதில் கவனம் வேண்டும். விழிப்புணர் தேவை.
பூராடம் : உங்களுடைய செயல் ஒன்று இன்று நிறைவேறும். நண்பர்கள் உதவியால் நன்மை காண்பீர்கள்.
உத்திராடம் 1 : நேற்று கொடுத்த வாக்குறுதியை இன்று காப்பாற்றுவீர்கள். சுபச்செலவு ஏற்படும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : இன்று இனம் புரியாத குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் தேவை.
திருவோணம் : பெரிய செயல் ஒன்றிற்கு முயற்சிப்பீர்கள். ஏமாற்றுபவரை கண்டு கொள்வீர்கள்.
அவிட்டம் 1, 2 : நினைத்ததை அடைய துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த செயலில் தடை,தாமதமும் ஏற்படும்.
சதயம் : ஆடம்பர செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : திட்டமிடாத செலவு வந்து சேரும். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற சூழல் உருவாகும்.

மீனம் : பூரட்டாதி 4 : வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும்.குடும்பம் நிம்மதி காண்பீர்கள்.
உத்திரட்டாதி : உங்கள் ஆசை ஒன்று நிறைவேறும். விலகிச்சென்ற உறவினர் ஒருவர் மீண்டும் வருவார்.
ரேவதி : லாபத்தை எதிர்பார்த்த ஒரு செயலில் ஈடுபட்டு இன்று வெற்றி காண்பீர்கள். நிதி நிலை உயரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here