மேஷம் : அசுவினி: பணம், நகைகள் கையாளுவதில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
பரணி: மகிழ்ச்சியான சூழல் அமையும். குடும்பத்தினருடன் கலகலப்பாக இருப்பீர்கள்.
கார்த்திகை 1: உறவினரை சந்தித்து குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாளுக்கு பிறகு உங்களின் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
ரோகிணி: குடும்பத்தினருடன் விசேஷத்திற்கு சென்று வருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிடம் 1, 2: வாழ்க்கைத்துணை வழியே அனுகூல நிலையை அடைவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத பயணம் உண்டாகும். அலைச்சல், செலவு அதிகரிக்கும்.
திருவாதிரை: குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக செலவு செய்வீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3: ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவசரப் பணிகள் வந்து அலைக்கழிக்கும்.

கடகம் : புனர்பூசம் 4: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
பூசம்: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வசூலாகும்.
ஆயில்யம்: நண்பர்களை சந்தித்து புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள்

சிம்மம் : மகம்: தடைபட்ட வேலைகளை நிறைவேற்றி லாபம் அடைவீர்கள்.
பூரம்: நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டபடி செயல்பட்டு நன்மை அடைவீர்கள்.
உத்தரம் 1: திறமையை பயன்படுத்தி நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். வரவு உண்டு.

கன்னி : உத்திரம் 2, 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். விருப்பம் நிறைவேறும்.
அஸ்தம்: பழைய பிரச்னை ஒன்று தீரும். குடும்பத்தினரின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
சித்திரை 1, 2: நிம்மதி உண்டாகும் நாள். உங்கள் முயற்சி ஒன்று வெற்றியாகும்.

துலாம் : சித்திரை 3, 4: அமைதி காக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
சுவாதி: எதிர்பாராத ஒரு பிரச்னையை சந்திப்பீர்கள். பிறருடன் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
விசாகம் 1, 2, 3: செயல்களில் குழப்பம் ஏற்படும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம் : விசாகம் 4: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
அனுஷம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தம்பதி இடையே ஒற்றுமை உண்டாகும்.
கேட்டை: திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு : மூலம்: செயல்களில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உங்களின் எண்ணம் நிறைவேறும்.
பூராடம்: சொத்து சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். உடலில் இருந்த பிரச்னை விலகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொருளாதார பிரச்னை தீரும்.
திருவோணம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள்.
அவிட்டம் 1, 2: உங்களின் தனித்தன்மை வெளிப்படும். நீண்ட நாள் பிரச்னை தீரும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: மனக்குழப்பம் தீரும். எண்ணியதை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
சதயம்: எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: பொழுது போக்கு விஷயங்களில் உங்களின் எண்ணம் செல்லும்.

மீனம் : பூரட்டாதி 4: எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
உத்திரட்டாதி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரேவதி: நீண்ட நாட்களாக எண்ணியிருந்த ஒன்றை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.