இன்றைய நாள் பலன் உங்களுக்கு எப்படி? 29.08.2022

0
167

மேஷம்: அசுவினி: செயல்களில் இருந்த தடைகள் விலகும். செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் வரும்.
பரணி: முயற்சிகள் ஆதாயமாகும். சுய ஆற்றல் வெளிப்படும். எதிரிகள் பின் வாங்குவார்கள்.
கார்த்திகை 1: அரசுவழி முயற்சி நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: வியாபாரத்தில் தடை விலகி நன்மை சேரும். பிள்ளைகளின் வழியே செலவு ஏற்படும்.
ரோகிணி: பணியிடத்தில் இருந்த சங்கடம் விலகும். அறிவாற்றல் வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை மறையும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4: அரசுவழி முயற்சிகளில் எதிர்பார்க்கும் நன்மைகள் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
திருவாதிரை: எதிர்பார்த்தவற்றை அடைவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்ப பிரச்னைகள் குறையும்.
பூரம் 1, 2, 3: அரசு ஊழியர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மறைமுக எதிரிகளால் சங்கடம் தோன்றும்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்த்த அளவிற்கு வரவு வரும். வியாபாரத்தில் லாபம் கூடும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம்: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு உண்டாகும்.
ஆயில்யம் வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். நெருக்கடி நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட பயம் விலகும்.

சிம்மம்: மகம்: பொருள்களைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை. உங்களுடைய பேச்சின் வழியே நன்மை தோன்றும்.
பூரம்: பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து, நவீன சாதனங்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1: யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்தை அடைவீர்கள். நிலையை சமாளிக்க எதிர்பார்த்த பணம் வரும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: வேலையில் இருந்த இழுபறி முடிவிற்கு வரும். மனம் மகிழும்படியான சூழல் உருவாகும்.
அஸ்தம்: வீட்டினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் தேடி வரும்.
சித்திரை 1, 2: குல தெய்வ அருளால் முயற்சி வெற்றி பெறும். சொத்துக்கள் வாங்கும் எண்ணம் பலிதமாகும்.

துலாம்: சித்திரை 3, 4: எதிர்பாராத வகையில் செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். வீண் குழப்பம் வந்து செல்லும்.
சுவாதி: மனம் விரும்பாத சம்பவம் ஒன்று நடைபெறும். வாகனப் பயணத்தில் கவனம் தேவைப்படும்.
விசாகம் 1, 2, 3: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். குழப்பத்தால் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4: வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டாகும். செயல்களில் வெற்றிகளை சந்திப்பீர்கள்.
அனுஷம்: நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். மனநிலை உற்சாகமடையும். கேட்டை: எதிர்பார்த்தவற்றில் லாபமான நிலையைக் காண்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.

தனுசு: மூலம்: வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். தொழில் தொடங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவர்.
பூராடம்: உங்கள் ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் இருந்த தடைகள் விலகி நினைத்ததை அடைவீர்கள்.
உத்திராடம் 1: உங்கள் முயற்சி ஆதாயமாகும். யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். லாபம் காண்பீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: நெருக்கடிகள் விலகும். ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஒன்று ஆதாயமாகும். நிதிநிலை உயரும்.
திருவோணம்: இரண்டு நாட்களாக இருந்த பிரச்னைகள் விலகும். செயல்களில் வேகம் உண்டாகும். பணவரவு கூடும்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தில் பிரச்னை விலகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவால் மகிழ்வீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: மனதை பாதிக்கும் வகையில் சில சம்பவம் நடக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சதயம்: தேவையற்ற சங்கடம் தோன்றி சோர்வடைய வைக்கும். பயணத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மை காண முடியாமல் போகும். புதிய பிரச்னையை எதிர்கொள்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: குழப்பங்கள் விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பாலினரால் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: எதிர்பார்த்த ஒன்று நிறைவேறும். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.
ரேவதி: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். விருப்பம் நிறைவேறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here