இன்றைய நாள் பலன் உங்கள் ராசிக்கு எப்படி? 15.08.2022

0
307

மேஷம்: அசுவினி : செலவு செய்து செயலில் லாபம் காண்பீர்கள். கவனமுடன் செயல்படுவதால் நன்மையுண்டு.
பரணி : திடீர் பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் நன்மை அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பண வரவு உண்டாகும்.
ரோகிணி : தொழிலில் பொருளாதார நிலை சீராகும். புதிய முயற்சியில் கவனம் தேவை.
மிருகசீரிடம் 1, 2 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : வேலைக்கான முயற்சி மேற்கொண்டு காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
திருவாதிரை : நண்பர்களின் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : பொருளாதார நிலை உயரும். அரசு வழி எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கடகம்: புனர்பூசம் 4: நேற்று இருந்து வந்த நெருக்கடி விலகும். உங்களுடைய முயற்சி வெற்றியாகும்.
பூசம் : உங்கள் திறமை வெளிப்படும். திட்டமிடும் செயலில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குரு அருளால் புதிய முயற்சி ஒன்று நிறைவேறும்.

சிம்மம்: மகம் : சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் தடுமாற்றம் அடையும்.
பூரம் : பகைவர்களின் கை மேலோங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடை உண்டாகும்
.உத்திரம் 1: பயணத்தில் எச்சரிக்கை தேவை. வாகனத்திற்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கூடி வரும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
சித்திரை 1, 2: நண்பர்களின் ஆதரவுடன் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள். ஆதாயமான நாள்.

துலாம்: சித்திரை 3, 4 : எதிர்ப்புகள் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகி சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.
சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் உங்கள் நீண்ட நாள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : தைரியத்துடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை விலகும்.

விருச்சிகம்: விசாகம் 4 : பிள்ளைகள் நிலையில் உயர்வு தோன்றும். வேலை வாய்ப்பு குறித்த தகவல் வரும்.
அனுஷம் : திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் வரக்கூடும். சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும்
கேட்டை : பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் விருப்பம் நிறைவேறும். எண்ணியதை அடைவீர்கள்.

தனுசு: மூலம் : மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
பூராடம் : உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
உத்திராடம் 1 : உங்கள் செயல்களில் சிறு தடையை சந்திப்பீர். அரசு வழியில் நெருக்கடி ஏற்படும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : தைரியத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் முயற்சி ஒன்றில் வெற்றி அடைவீர்கள்.
திருவோணம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள். பொது இடல்களில் உங்கள் மதிப்பு உயரும் நாள்.
அவிட்டம் 1, 2 : உங்கள் செயல் சகோதரர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பண நெருக்கடிகளை சரி செய்வீர்கள்.
சதயம் : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பெற்றோரின் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மீனம்: பூரட்டாதி 4 : உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.
உத்திரட்டாதி : பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும்.
ரேவதி : கடுமையாக உழைத்தும் உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க தாமதமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here