இன்றைய பலன் உங்களுக்கு என்ன சொல்கிறது? 30.06.2022

0
262

மேஷம் : அசுவினி: தேவைக்கேற்ற வருவாய் வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி: புதிய முயற்சிகள் பலன் தரும். நண்பர்களின் ஆதரவுடன் உங்களின் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1: சகபணியாளர்களின் ஒத்துழைப்புடன் உங்களது முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். உங்கள் செல்வாக்கு உயரும்.
ரோகிணி: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும்.
மிருகசீரிடம் 1, 2: குல தெய்வ அருளால் உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். மனக்குழப்பம் விலகும்.
திருவாதிரை: எதிர்பாராத செலவு தோன்றும். பணத்தேவை அதிகரித்து உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம் 1, 2, 3: பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். மன நிம்மதி பாதிக்கும்.

கடகம் : புனர்பூசம் 4: எதிர்பார்த்த செய்தி வரும். உங்களது முயற்சியால் நினைத்ததை அடைவீர்கள்.
பூசம்: வெளி வட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். ஓய்வின்றி உழைப்பீர்கள்.
ஆயில்யம்: குருவருளால் உங்களின் எண்ணம் நிறைவேறும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் : மகம்: உற்சாகத்துடன் செயல்பட்டு உங்கள் இலக்கை அடைவீர்கள். பண வரவு உண்டாகும்.
பூரம்: எதிர்பார்த்த செய்தி வரும். தொழிலில் புதிய அணுகுமுறையை செயல்படுத்தி லாபம் காண்பீர்கள்.
உத்திரம் 1: பழைய முதலீடுகளில் இருந்து வருவாய் வந்து சேரும். குடும்ப பிரச்னை தீரும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
அஸ்தம்: உங்களின் முயற்சி நண்பர்களின் ஆதரவுடன் வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: உங்கள் மீது பொறாமை கொண்டு செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.

துலாம் : சித்திரை 3, 4: நண்பர்களாலும் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். நெருக்கடியான நாள்.
சுவாதி: கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகளை சந்திப்பீர்கள். மனச்சோர்வு அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். அலைச்சலும் செலவும் ஏற்படும்.

விருச்சிகம் : விசாகம் 4: இன்று மாலை வரை எச்சரிக்கை அவசியம். யாரிடமும் வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
அனுஷம்: பணியிடத்தில் உங்களை சிலர் சீண்டிப் பார்ப்பார்கள். அமைதி காப்பது நல்லது.
கேட்டை: கடவுள் வழிபாடு இன்னலை அகற்றும். வேலையில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு : மூலம்: உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
பூராடம்: பணியாளர்கள் தாங்கள் விரும்பிய இட மாற்றத்தை அடைவார்கள்.
உத்திராடம் 1: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: நீண்ட நாள் பிரச்னை தீரும். உற்சாகமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.
திருவோணம்: பயணத்தினால் பலன் காண்பீர்கள். குடும்ப பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
அவிட்டம் 1, 2: வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும். முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4: நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும் நாள்.
சதயம்: தொழிலில் ஏற்பட்டிருந்த தடைகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினர் உதவி செய்வர்.
பூரட்டாதி 1, 2, 3: திருப்பங்கள் நிறைந்த நாள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து வெற்றி காண்பீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4: அந்நியர்களின் ஆதரவுடன் ஆதாயம் காண்பீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும்.
உத்திரட்டாதி: பிறரால் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். உங்கள் எண்ணம் ஈடேறும் நாள்.
ரேவதி: பழைய பிரச்னைகள் மீண்டும் தலையெடுக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here