இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 02.07.2022

0
211

மேஷம் : அசுவினி: வம்பு வழக்குகள் இன்று ஏற்படலாம். பிறரது பிரச்னைகளில் தலையிடாதீர்கள்.
பரணி: கடுமையான முயற்சிக்குப் பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நிதானமாக செயல்படுங்கள்.
கார்த்திகை 1: தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: அறிவுப்பூர்வமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உங்களின் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பேச்சில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: பிறரது செயல்பாடு உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அமைதி காப்பது நல்லது.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: வேலைப்பளுவால் மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை.
பூசம்: மகிழ்ச்சியை நோக்கி மனம் செல்லும். உங்களுக்கேற்ப செயல்களை மாற்றிக் கொள்வீர்கள்.
ஆயில்யம்: தடைகளை விலக்கி நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.

சிம்மம்: மகம்: வீட்டில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.
பூரம்: குடும்பத்தினருக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
உத்திரம் 1: உங்களது செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: வருவாய்க்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: கடன்களை அடைப்பீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சித்திரை 1, 2: நிதி நிலை உயரும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: தொழிலில் இருக்கும் தடைகளை சரிசெய்ய முயற்சி செய்வீர்கள்.
சுவாதி: வேலைக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
விசாகம் 1, 2, 3: தொழிலில் போட்டியும், எதிர்ப்புகளும் அதிகரிக்கும். யோசித்து செயல்படவும்.

விருச்சிகம்: விசாகம் 4: தந்தைவழி உறவுகளால் உங்களது செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.
அனுஷம்: முன்னோர்களின் அருளினால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்குரிய அறிகுறி உண்டாகும்.
கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு: மூலம்: வெளியூர் பயணத்தால் சில சங்கடங்கள் உண்டாகும். நிதானமாக செயல்படுங்கள்.
பூராடம்: சங்கடமான சூழ்நிலை உண்டாகும். அதை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த வருமானத்தில் தடை உண்டாகும். பணியிடத்தில் கவனமுடன் செயல்படுங்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.
திருவோணம்: நண்பர்களால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். மனதிற்கினிய சம்பவம் நடந்தேறும்.
அவிட்டம் 1, 2: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: சண்டை சச்சரவு என்று விலகிச் சென்றவர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.
சதயம்: தைரியமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மனம் மகிழும் நாள்.
பூரட்டாதி 1, 2, 3: உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

மீனம்: பூரட்டாதி 4: பிள்ளைகள் குறித்த கவலைகள் வந்து செல்லும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி: குடும்ப நன்மைக்காக கோயில் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.
ரேவதி: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here