மேஷம் : அசுவினி: அரசு வழியில் தடைபட்டிருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும்.
பரணி: காலையிலேயே நல்ல செய்தி வரும். உங்களுடைய செயல்கள் நினைத்தபடி நடந்தேறும்.
கார்த்திகை 1: உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: சுறுசுறுப்பாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். யோகமான நாள்.
ரோகிணி: அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மிருகசீரிடம் 1, 2: பணியாளர்கள் ஆதரவுடன் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைபட்ட முயற்சிகள் இன்று நடந்தேறும்.
திருவாதிரை: அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும். அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்பட்டு பிறரால் முடியாத செயலை செய்து முடிப்பீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4: குருவருளால் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். விரும்பியதை அடைவீர்கள்.
பூசம்: தடைபட்ட வருவாய் வந்து சேரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம்: பேச்சாற்றலால் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும்..

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். நெருக்கடிகள் விலகி நிதிநிலை உயரும்.
பூரம்: பணியிடத்தில் உங்களுடைய ஆலோசனைக்கு மதிப்பு ஏற்படும். பாராட்டப்படுவீர்கள்.
உத்திரம் 1: உங்களது மனமே இன்று உங்களை வழி நடத்தும். செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: அலுவலகம், தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
அஸ்தம்: அலைச்சல் அதிகரித்து சோர்வடைவீர்கள் என்றாலும், உங்களது முயற்சி லாபமாகும்.
சித்திரை 1, 2: குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற நவீன சாதனங்களை வாங்குவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: செயல்களால் வருமானம் காண்பீர்கள். நீங்கள் ஈடுபடும் முயற்சி வெற்றியாகும்.
சுவாதி: லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டு, நீங்கள் எண்ணியதை அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.

விருச்சிகம் : விசாகம் 4: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தோருக்கு எதிர்பார்த்த நற்செய்தி வரும்.
அனுஷம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனுகூலத்தை ஏற்படுத்தும்.
கேட்டை: நண்பர்களின் ஒத்துழைப்புடன் புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்

தனுசு : மூலம்: கடந்த கால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் மோதல் உண்டாகலாம். வார்த்தைகளில் கோபம் வேண்டாம்.
உத்திராடம் 1: பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: ஆவலுடன் நீங்கள் மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று நிறைவேறாமல் போகும்.
திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நன்மையாகும்.
அவிட்டம் 1, 2: வீண் சச்சரவுகள் உங்களைத் தேடி வரும். நிதானம் தேவை.

கும்பம் : அவிட்டம் 3, 4: நண்பர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகள் வெற்றியாகும். பண வரவு கூடும்.
சதயம்: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை தீரும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மறைமுக எதிரிகள் பலமிழந்து போவர்.
உத்திரட்டாதி: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ரேவதி: எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.