இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? -10.07.2022

0
171

மேஷம்: அசுவினி: செயல்களில் இழுபறியான நிலை உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
பரணி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். அமைதி காப்பது நன்மை தரும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். பிறரை நம்ப வேண்டாம்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: திருமண பேச்சு வார்த்தை சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
ரோகிணி: விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2: வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பொருளாதார சங்கடம் தீரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிர்ப்பு விலகும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை அகலும்.
புனர்பூசம் 1, 2, 3: பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4: குடும்ப பிரச்னை தீரும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
பூசம்: புதிய முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் வருவர்.
ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை காண்பீர்கள். ஆடம்பர செலவு செய்வீர்கள்.

சிம்மம் : மகம்: உங்களுக்கு விருப்பமான ஒருவரை இன்று சந்திப்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூரம்: வியாபார நுணுக்கங்களை தெரிந்து கொண்டு செயல்படுவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி : உத்திரம் 2, 3, 4: சொத்துப் பிரச்னை உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செயல்கள் லாபமாகும்.
அஸ்தம்: உங்களின் திறமை வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
சித்திரை 1, 2: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: இரண்டு நாளாக இருந்து வந்த சங்கடம் விலகும். மகிழ்ச்சி கூடும்.
சுவாதி: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை விலகும். கோயில் தரிசனம் மேற்கொள்வீர்கள்
விசாகம் 1, 2, 3: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம் : விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
அனுஷம்: சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம்.
கேட்டை: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.

தனுசு : மூலம்: வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
பூராடம்: எதிர்கால நலனை கருதி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். செலவு கூடும்.
உத்திராடம் 1: கேளிக்கை, சந்தோஷம் என்று செலவுகள் செய்வீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திப்பீர்கள்.
திருவோணம்: புதிய பொறுப்பு வந்து சேரும். பிறர் பாராட்டும்படி செயல்படுவீர்கள்.
அவிட்டம் 1, 2: வியாபாரத்தை விருத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4: பொது நலனில் கவனம் செல்லும். உங்களின் செல்வாக்கு உயரும்.
சதயம்: கூட்டு வியாபாரத்தில் ஆதாயம் கூடும். புதிய முயற்சி மேற்கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4: இரண்டு நாளாக இருந்து வந்த நெருக்கடி விலகும். மனநிம்மதி உண்டாகும்.
உத்திரட்டாதி: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி: நீண்ட நாளாக திட்டமிட்டிருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here