இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? – 22.08.2022

0
296

மேஷம்: அசுவினி: முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். ஆதாயமான நாள்.
பரணி: எதிர்பாராத லாபம் உண்டாகும். பணவரவால் கடனை அடைத்து நிம்மதி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1: முயற்சியில் இருந்த தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை சேரும். சகோதரர் ஆதரவு காட்டுவர்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முதலீட்டை தவிர்க்கவும். பேச்சில் நிதானம் தேவை.
ரோகிணி: முயற்சி நிறைவேறும். வரவு செலவுகளில் கவனம் தேவை. குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: திட்டமிட்டு செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நெருக்கடியை சமாளித்து சாதிப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சிந்தனை மேலோங்கும்.
திருவாதிரை: மனஅழுத்தம் குறையும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். வரவுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: இனிய சம்பவம் நடந்தேறும். ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். நன்மையான நாள்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: எதிர்பாராத செலவு உண்டாகும். பயணம், வரவு செலவில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
பூசம்: வழக்கு சாதகமாகும். அரசு வழியில் நன்மை உண்டு. செலவு அதிகரித்தாலும் முயற்சியால் முன்னேறுவீர்கள்.
ஆயில்யம்: அரசு தரப்பில் முயற்சி நிறைவேறும். குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக கூடுதல் செலவுகள் செய்வீர்கள்.

சிம்மம்: மகம்: வருமானத்தில் இருந்த தடை விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நண்பரால் நன்மை அதிகரிக்கும்.
பூரம்: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். தொழிலில் இருந்த சங்கடம் விலகும். லாப நிலை உண்டாகும்.
உத்திரம் 1: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். வருவாயில் இருந்த தடை விலகும். ஆதாயமான நாள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டை பெறுவர். உழைப்பிற்குரிய மரியாதை உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.
அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்து நினைத்ததை சாதிப்பீர்கள். பொன் பொருள் சேரும்.
சித்திரை 1, 2: புதிய முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் நெருக்கடிகளை சரிசெய்வீர்கள். வரவால் மகிழ்வீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: முயற்சிகளில் இழுபறி உண்டாகும். அரசு வழியில் பிரச்சினைகள் உருவாகும். எச்சரிக்கை தேவை.
சுவாதி: எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
விசாகம் 1, 2, 3: வம்பு வழக்குகள் சங்கடப்படுத்தும். சட்ட விரோத செயல்களால் சிரமங்கள் உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இழுபறி உண்டாகும். பயணத்தில் கவனம் தேவை.
அனுஷம்: தேவையற்றப் பிரச்னைகள் தோன்றும். வழக்கு விவகாரங்களில் நன்மை உண்டாகாமல் போகும்.
கேட்டை: திட்டம் குளறுபடியாகும். எதிர்பார்த்தவற்றில் நன்மை பெற முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: முயற்சியில் இருந்த தடை விலகும். விரோதிகள் விலகுவர். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
திருவோணம்: வழக்கத்தை விட செயலில் வேகம் இருக்கும். நிறைவேறாத எண்ணம் ஒன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: சோர்வு விலகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். புதிய முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: பிள்ளைகள் நலனில் ஆர்வம் கூடும். முயற்சியில் தடை உண்டாகும். செலவு அதிகரிக்கும்.
சதயம்: ஆதாயம் எதிர்பார்த்து செய்த முயற்சி நிறைவேறாமல் போகும். குடும்பத்தினர் அதிருப்தி கொள்வர்.
பூரட்டாதி 1, 2, 3: பூர்வீக சொத்தில் பிரச்னை உருவாகும். செயலில் பின்னடைவு, பணவரவில் தடை ஏற்படும்.

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். வேலை காரணமாக சிலர் வெளியூர் செல்வர். அரசு பணியில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: எதிர்பாராத வேலையால் நெருக்கடி ஏற்படலாம். அதிகாரிகளுடன் அனுசரித்துப் போவது நல்லது.
ரேவதி: முயற்சியில் தடையை சந்திப்பீர்கள். உடல்நலனில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here