மேஷம்: அசுவினி: முயற்சியில் முழுமையான கவனம் தேவை. பிறரை நம்பி முக்கிய பணிகளை ஒப்படைக்க வேண்டாம்.
பரணி: செயலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி நிலை ஏற்படும்.
கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு பயனடைவீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை தேவை. சிலர் மேலதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாவர்.
ரோகிணி: வழக்கமான செயல்களிலும் நிதானம் தேவை. அரசுவகை முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மை தராது.
மிருகசீரிடம் 1, 2: தொழிலில் லாபம் பெருகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றும் வகையில் பணம் வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். ஆதாயத்தை வைத்து பொன் பொருள் வாங்குவீர்கள்.
திருவாதிரை: தடைபட்ட முயற்சிகள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு அழைப்பு வரும்.
புனர்பூசம் 1, 2, 3: திடீர் பயணம் செல்வீ்ர்கள். கடும் முயற்சிக்குப் பின் ஈடுபட்ட செயலில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: பண விஷயத்தில் கவனம் தேவை. முயற்சிகள் நிறைவேற விட்டுக் கொடுப்பது நல்லது.
பூசம்: முயற்சியில் தீவிரம் காட்டுவீர்கள். அலைச்சல்களின் வழியே நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆயில்யம் புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்: மகம்: உங்களுடைய எண்ணம் நிறைவேறும். விஐபிகளின் ஆதரவால் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பூரம்: பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மனதில் தீவிர சிந்தனை உண்டாகி குழப்பம் ஏற்படும்.
உத்திரம் 1: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவைப்படும்.

கன்னி: உத்திரம் 2, 3,4: எதிர்பாராத செலவு உண்டாகி அவதிப்படுவீர்கள். அலைச்சல் கூடும். செயலில் கவனம் தேவை.
அஸ்தம்: குடும்பத்தினரின் பேச்சுஇ வார்த்தைகளால் சங்கடங்கள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
சித்திரை 1, 2: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக பணம் செலவு செய்வீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். பணவரவு கூடும். நினைத்திருந்த ஒரு பணியை இன்று முடிப்பீர்கள்.
சுவாதி: மனதில் புதிய சிந்தனை உண்டாகும். எதிர்காலத்திற்குரிய வழியை இன்று தேர்வு செய்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். திடீர் வரவு உண்டு.

விருச்சிகம்: விசாகம் 4: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு கூடும். ஆர்வமுடன் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
அனுஷம்: தொழிலை மாற்றி அமைக்கவோஇ விரிவு செய்யவோ முயற்சிப்பீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும்.
கேட்டை: முயற்சியில் இருந்த இழுபறி மாறும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

தனுசு : மூலம்: நினைப்பதற்கு மாறாக சில செயல்கள் இன்று நடைபெறும். எதிரிகளின் கை மேலோங்கும்.
பூராடம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். முயற்சி இழுபறியாகும்.
உத்திராடம் 1: புதிய முயற்சிகள் நிறைவேறாமல் போகும். பொருளாதார நெருக்கடியால் சிரமம் உண்டாகலாம்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் தடை, தாமதம் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.

திருவோணம்: முயற்சியில் சிரமங்களைக் காண்பீர்கள். எதிரிகளால் பிரச்னைகளை சந்திப்பீர்கள்ஃ கவனம் தேவை.
அவிட்டம் 1இ 2: யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாமல் போகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: இனிய சம்பவங்களால் மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த ஒன்றை அடைவீர்கள். யோகமான நாள்.
சதயம்: வாழ்க்கைத்துணை வழியே உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 1இ 2இ 3: உங்களின் முயற்சி நண்பர்கள் ஆதரவுடன் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

மீனம்: பூரட்டாதி 4: உங்களுடைய செயல்களில் விவேகம் இருக்கும். உங்களுக்குண்டான பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.
உத்திரட்டாதி: சுறுசுறுப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிரிகளால் உண்டான தொல்லை விலகும்.
ரேவதி: தைரியத்துடன் செயல்படுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்வர். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.