மேஷம்: அசுவினி: உங்கள் செயல்கள் இன்று ஆதாயமாகும். பொருளாதார நிலை உயரும்.
பரணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
கார்த்திகை 1: நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: நீண்ட நாள் பிரச்னை ஒன்றிற்கு முடிவு காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்

கடகம்: புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
பூசம்: நெருக்கடிகள் நீங்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும்.
ஆயில்யம்: எதிர்பார்த்த வருமானம் உண்டு. தாய்வழி உறவினரால் நன்மைகள் கூடும்.

சிம்மம்: மகம்: உங்களின் செல்வாக்கு உயரும். செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும்.
பூரம்: அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1: உங்களின் திறமை வெளிப்படும். விஐபிகளின் ஆதரவு உங்களுக்கு உண்டு.

கன்னி: உத்திரம் 2, 3, 4: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வரவுகளில் இருந்த தடை அகலும்.
அஸ்தம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1, 2: எதிர்பார்த்த பண வரவு உண்டு. சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: உங்கள் விருப்பப்படி செயல்படுவீர்கள். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடைபெறும்.
சுவாதி: குடும்பத்தினரின் நலனுக்கான ஒரு முடிவை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

விருச்சிகம்: விசாகம் 4: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.
அனுஷம்: புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்வீர்கள்.
கேட்டை: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத செலவு உண்டு.

தனுசு: மூலம்: நிதி நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள். உங்களின் தேவைகள் நிறைவேறும்.
உத்திராடம் 1: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: தொழில், வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
திருவோணம்: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். பொருளாதார நிலை உயரும்
அவிட்டம் 1, 2: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் சாதகமான நிலை உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: நண்பர்களின் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சதயம்: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்ததை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.

மீனம்: பூரட்டாதி 4: பேச்சிலும் செயலிலும் கவனம் தேவைப்படும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: உங்கள் செயல்கள் உங்களுக்கே எதிர்மறையாகும். பிறரால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
ரேவதி: நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.