இன்றைய பலன் உங்களுக்கு எப்படி .? 05.09.2022

0
296

மேஷம்: அசுவினி: இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும்.  பரணி: கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கார்த்திகை 1: அரசு வழியில் தடைபட்டிருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: புதிய முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பாராத பிரச்னையால் சங்கடம் உண்டாகும். ரோகிணி: இன்று புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். உங்கள் திறமைக்கு சவாலான நாள். மிருகசீரிடம் 1, 2: பணியிடத்தில் திடீரென்று பிரச்னை தோன்றும். பேச்சில் கவனம் தேவை.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். புனர்பூசம் 1, 2, 3: எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும்.  பூசம்: பணியிடத்தில் உங்கள் செயல்களுக்கு வரவேற்பு உண்டாகும். எதிர்பாராதவற்றில் லாபம் காண்பீர்கள்.ஆயில்யம்: பெற்றோர் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம்: மகம்: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.  பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: தாய்வழி உறவுகள் வழியே ஆதாயம் அடைவீர்கள். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் ஏற்படும். அஸ்தம்: வரன் தேடி வந்தவர்களுக்கு நற்செய்தி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.  சித்திரை 1, 2: திடீர் பயணம் அலைச்சலை உண்டாக்கும் என்றாலும், உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்: சித்திரை 3, 4: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்களின் முயற்சி ஒன்று நிறைவேறும். சுவாதி: வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். உங்கள் அறிவாற்றலால் நிதிநிலையில் உயர்வு உண்டாகும். விசாகம் 1, 2, 3: நண்பர்களின் உதவியால் அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும். 

விருச்சிகம்: விசாகம் 4: உங்களை விட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். அனுஷம்: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த வருமானம் உண்டு. கேட்டை: நீங்கள் எதிர்பார்த்திருந்த வேலை வாய்ப்பு குறித்த செய்தி இன்று வரும். 

தனுசு: மூலம்: மனதில் குழப்பம் ஏற்படும். உங்கள் பிரச்னைகளை பிறரிடம் கொண்டு செல்ல வேண்டாம். பூராடம்: சிலர் உங்களை சீண்டிப் பார்க்க முயற்சிப்பர். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். உத்திராடம் 1: இன்று வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதுவே நல்லது. 

மகரம்: உத்திராடம் 2, 3, 4: திடீர் செலவுகள் தோன்றி உங்கள் இருப்பைக் கரைக்கும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. திருவோணம்: வருவாயை விட செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. அவிட்டம் 1, 2: இன்று அவசர வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: உங்கள் செயல்கள் ஆதாயத்தை உண்டாக்கும். பிறரது பிரச்னைகளை தீர்ப்பீர்கள். சதயம்: தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பூரட்டாதி 1, 2, 3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்களின் செல்வாக்கு உயரும்.

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு உண்டு. உத்திரட்டாதி: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். புதிய முயற்சி அனுகூலமாகும். ரேவதி: உறவினரின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here