இன்றைய பலன் உங்களுக்கு எப்படி?

0
230

மேஷம்: அசுவினி : எதிர்பாராத செலவு ஏற்படும் என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது.
பரணி : திடீர் பயணம் ஏற்படும். அலைச்சலும், செலவுகளும் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நிதி நிலை சீராகும்.
ரோகிணி : தொழிலில் புதிய முயற்சி மேற்கொண்டு லாபம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும்.
திருவாதிரை : நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் உங்கள் முயற்சிக்கேற்ப வருமானம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

கடகம் : புனர்பூசம் 4 : இரண்டு நாட்களாக இருந்து வந்த நெருக்கடி விலகும். உங்களுடைய முயற்சி வெற்றியாகும்.
பூசம் : குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்படும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குரு அருளால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

சிம்மம் : மகம் : உங்கள் செயலில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும்.
பூரம் : பகைவர்களின் கை மேலோங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சிறு தடை உண்டாகும்
.உத்தரம் 1: பயணத்தில் எச்சரிக்கை தேவை. வாகனத்திற்காக செலவு செய்வீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கூடி வரும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
அஸ்தம்: தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னை அகலும். மகிழ்ச்சியான நாள்.
சித்திரை 1, 2 : நண்பர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயமான நாள்.

துலாம் : சித்திரை 3, 4 : எதிர்ப்புகள் விலகும். உடல் நிலையில் உண்டான சங்கடம் நீங்கும்.
சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : வியாபாரத்தில் தடை அகற்றுவீர்கள். பணியிடத்திலிருந்து வந்த நெருக்கடி விலகும்.

விருச்சிகம் : விசாகம் 4 : பிள்ளைகள் நிலையில் உயர்வு தோன்றும். வேலை குறித்த நல்ல தகவல் வரும்.
அனுஷம் : திருமண வயதில் இருப்பவர்களுக்கு குரு அருளால் வரன் வரக்கூடும்.
கேட்டை : பெற்றோரின் ஆதரவுடன் நீங்கள் எண்ணியதை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

தனுசு : மூலம் : பெற்றோர் குறித்த கவலை வந்து போகும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.
பூராடம் : தாய்வழி உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
உத்திராடம் 1 : உங்கள் செயலில் சிறு சிறு தடை ஏற்படும். அரசு வழியில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : வியாபாரத்தில் நுாதனமாக செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.
திருவோணம் : தொழிலில் திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் உண்டாகும். செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1, 2: உங்கள் எண்ணத்தை சகோதரர் உதவியுடன் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பண நெருக்கடிகளை சரி செய்வீர்கள்.
சதயம் : தைரியமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

மீனம் : பூரட்டாதி 4 : எதிர்காலம் குறித்த சிந்தனையுடன் ஒரு செயலை தொடங்குவீர்கள்.
உத்திரட்டாதி : பணியில் கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும். வேலை பளுவால் சோர்வுடன் காணப்படுவீர்கள்.
ரேவதி : கடுமையான பணிக்கிடையிலும் கலகலப்பு காணப்படும். ஊக்கத்துடன் காணப்படுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here