இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 29.06.2022

0
182

மேஷம் : அசுவினி: செயலில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பரணி: அரசு வழியிலான முயற்சிகள் நிறைவேறும். பண வரவில் இருந்த தடைகள் விலகும்.
கார்த்திகை 1: அரசியல் பிரமுகர்களின் உதவியுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: வங்கிப் பணியாளர்கள் பண விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: நிதி நிலை சீராகும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயலில் தடுமாற்றம் ஏற்படும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
திருவாதிரை: முயற்சியை நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படுவீர்கள். நிதானத்துடன் செயல்படுங்கள்.
புனர்பூசம் 1, 2, 3: கவனச் சிதறலால் எதிர்பார்த்தவற்றில் எதிர்மறையான பலன் உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தின் தேவைக்காக அசையும் பொருட்களை விற்பனை செய்து சமாளிப்பீர்கள்.
பூசம்: புதிய முயற்சிகள் பலன் தராமல் போகும். வழக்கமான செயல்களிலும் நிதானம் தேவை.
ஆயில்யம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பில் இருந்த பணம் கை கொடுக்கும்.

சிம்மம்: மகம்: புதிய முயற்சி லாபம் அளிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள்.
பூரம்: அந்நியரின் வழியே ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.
உத்திரம் 1: திட்டமிட்ட முயற்சிகள் சாதகமாகும். பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை உண்டாக்கும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். அரசு வழியிலான முயற்சிகள் சாதகமாகும்.
அஸ்தம்: உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும்.
சித்திரை 1, 2: தொழிலில் உங்களின் அணுகுமுறைக்கு பலன் உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.

துலாம் : சித்திரை 3, 4: பிரச்னைகளை சரி செய்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
சுவாதி: மனக்குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகளில் இழுபறியும் தாமதமும் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்ள வேகமாக செயல்படுவீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4: புதிய முயற்சியை தள்ளி வையுங்கள். வழக்கமான செயல்கள் நன்மை தரும்.
அனுஷம்: பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கேட்டை: அரசு வழியில் சில நெருக்கடிகள் ஏற்படும். குறுக்கு வழியிலான செயல்களால் சங்கடம் தோன்றும்.

தனுசு : மூலம்: கனவுகள் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த ஒன்றில் சாதகமான நிலை உண்டாகும்.
பூராடம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் விலகும்.
உத்திராடம் 1: நண்பரின் உதவியுடன் செயலில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: கடவுள் அருளால் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள்.
திருவோணம்: கேள்விக்குறியாக இருந்த ஒரு முயற்சி இன்று உங்களுக்கு சாதகமாகும்.
அவிட்டம் 1, 2: எதிரிகள் பலமிழந்து போவர். உங்களுடைய முயற்சிகளில் லாபத்தை காண்பீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4: குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு உண்டாகும். அனுசரித்துச் செல்லுங்கள்.
சதயம்: பிள்ளைகளால் வேதனைக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சிகள் இழுபறியாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் போகும்.

மீனம் : பூரட்டாதி 4: அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.
உத்திரட்டாதி: வேலைப்பளு கூடும். மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். கவனமுடன் செயல்படுங்கள்.
ரேவதி: அலைச்சல் கூடும். நினைத்தவற்றில் அனுகூலமற்ற நிலையை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here