மேஷம் : அசுவினி: அடிப்படை வசதிகளை அதிகரித்துக் கொள்ள செலவுகள் செய்வீர்கள்.
பரணி: முயற்சியில் போராடி வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
கார்த்திகை 1:அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும். அந்தஸ்து உயரும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: நிதிநிலை உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும்.
ரோகிணி: வீட்டில் சுப நிகழ்சிக்குரிய பேச்சு முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2:குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: வேலை வாய்ப்பிற்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பதில் வரும்.
புனர்பூசம் 1, 2, 3:நண்பர்களின் உதவியுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4:தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம்: தொழிலில் உங்கள் கைமேலோங்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம்: குழந்தை பாக்கியம் குறித்து தகவல் தெரியவரும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: மகம்:மற்றவரை நம்பி பணிகளை ஒப்படைக்க வேண்டாம். அதனால் சங்கடமே உண்டாகும்.
பூரம்: முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்தரம் 1:தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். மனம் குழப்பமடையும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: எண்ணம் நிறைவேறும் நாள். நண்பர்களால் புதிய பாதை தெரியும்.
அஸ்தம்: திட்டமிட்டிருந்த செயல்களை திட்டமிட்டபடி நிறைவேற்றி முடிப்பீர்கள்.
சித்திரை 1, 2: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை விலகும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

துலாம் : சித்திரை 3, 4:உங்கள் அணுகுமுறையை மாற்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
சுவாதி:வேலை வாய்ப்பு குறித்த சிந்தனை மேலோங்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையளிக்கும்.
விசாகம் 1, 2, 3:உங்களை விட்டு விலகியவர்கள் உதவி கேட்டு வருவர். பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

விருச்சிகம்: விசாகம் 4:குடும்ப உறவுகளிடம் செல்வாக்கு உயரும். எண்ணங்கள் நிறைவேறும்.
அனுஷம்: நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். நல்ல நாள்.
கேட்டை:பணி புரியும் இடத்தில் அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். யோகமான நாள்.

தனுசு : மூலம்: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
பூராடம்: பணியில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள். செல்வாக்கு வெளிப்படும் நாள்.
உத்திராடம் 1:எதிர்கால நலன் கருதி புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். லாபமான நாள்.

 மகரம் : உத்திராடம் 2, 3, 4:நீங்கள் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். எதிரி தொல்லை விலகும்.
திருவோணம்: பணியில் இருந்த சங்கடம் விலகும். கமிஷன் ஏஜன்சியினர் ஆதாயம் காண்பீர்கள்.
அவிட்டம் 1, 2:புதிய பொறுப்பு, பதவி உங்களைத் தேடி வரும். செல்வாக்கு உயரும்.

கும்பம் : அவிட்டம் 3, 4:திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.
சதயம்:பிரபலங்களின் நட்பால் எண்ணம் பூர்த்தியாகும். பண வரவு மகிழ்ச்சி தரும்.
பூரட்டாதி 1, 2, 3:உங்கள் தேவை பூர்த்தியாகும். தடைபட்ட செயல் நடந்தேறி லாபம் தரும்.

மீனம் : பூரட்டாதி 4: நேர்மறை எண்ணம் உருவாகும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செலுத்துவீர்கள்.
உத்திரட்டாதி: வருவாய் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி நடத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள்
ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். நண்பர் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகும்.