இன்றைய பலன் உங்கள் ராசிக்கு எப்படி? 25.06.2022

0
215

மேஷம் : அசுவினி : செயல்களில் எதிர்பார்த்த நன்மை அடைய முடியாமல் போகும்.
பரணி : பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
கார்த்திகை 1: ஆசைகள் அதிகரிக்கும் என்றாலும் செயல்களில் இழுபறி நிலை ஏற்படும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : ஓய்வு இல்லாமல் உழைப்பீர்கள். பணியிடத்தில் வேலை சுமை அதிகரிக்கும்
ரோகிணி : வரவு வந்தாலும் அதற்கேற்ப செலவு தயாராக இருக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். கடன் வாங்கி செலவு செய்வீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : அரசு வழியிலான முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள்.
திருவாதிரை : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு நன்மை காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
புனர்பூசம் 1, 2, 3 : பணியிடத்தில் செல்வாக்கு உயரும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும்.

கடகம் : புனர்பூசம் 4 : தொழிலில் இருந்த மந்த நிலை சரியாகும். லாபம் அதிகரிக்கும்.
பூசம் : புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி பலிதமாகும்.
ஆயில்யம் : பணியிடத்தில் இருந்த நெருக்கடி சரியாகும். உபரி வருமானம் ஏற்படும்.

சிம்மம் : மகம் : சங்கடமான நிலை மாறும். உங்கள் அணுகுமுறையால் தொழிலில் லாபம் உண்டாக்கும்.
பூரம் : நீங்கள் நினைத்த செயலை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தரம் 1 : உங்கள் முயற்சி சிறு சிறு தடைகளுக்குப்பின் நிறைவேறும். பண வரவு உண்டு.
கன்னி : உத்திரம் 2, 3, 4 : கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
அஸ்தம்: எதிர்பார்த்த செயலில் பின்னடைவு ஏற்படும். மறைமுக எதிர்ப்பு உண்டாகும்.
சித்திரை 1, 2 : புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

துலாம் : சித்திரை 3, 4 : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் முயற்சி பலனளிக்கும்
சுவாதி : நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்களுடைய எண்ணம் நிறைவேறும் நாள்.
விசாகம் 1, 2, 3 : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் லாபம் அடைவீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4 : உற்சாகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். முன்னேற்றமான நாள்.
அனுஷம் : பணியிடத்தில் இருந்து வந்த பிரச்னை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை : தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தனுசு : மூலம் : அவசரம் இல்லாமல் நிதானத்துடன் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.
பூராடம் : கடுமையான தடைக்கு பின் உங்களுடைய செயலில் வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் 1 : விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். அரசு வழியில் நன்மையுண்டு.
திருவோணம் : எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய எண்ணம் இன்று நிறைவேறும்.அவிட்டம் 1, 2 : சங்கடத்தை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : தெளிவுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். ஆதாயமான நாள்.
சதயம் : எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்டிருந்த செயல் முன்னேற்றம் காணும்.
பூரட்டாதி 1, 2, 3 : சகோதரர் ஆதரவுடன் உங்களுடைய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். யோகமான நாள்.

மீனம் : பூரட்டாதி 4 : குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி : வார்த்தைகளில் கவனம் தேவை. அனுசரித்துச் செல்வதின் மூலம் நன்மை உண்டு.
ரேவதி : சிந்தித்து செயல்படுவதின் மூலம் பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலை உயரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here