இன்றைய பல உங்களுக்கு எப்படி? 14.08.2022

0
232

மேஷம்: அசுவினி : செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். திடீர் வரவு மகிழ்ச்சியை உண்டாகும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த பணம் இன்று உங்களுக்கு கிடைக்கும். இழுபறியாய் இரு ந்த வேலை முடியும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத்தேடி வரும்.
ரோகிணி : பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சியில் சிறு தடை ஏற்படும்.கவனமுடன் செயல்படுங்கள்.
திருவாதிரை : எதிர்பார்த்த தகவல் தாமதமாகும். உங்கள் செயல்களில் இன்று அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3 : பணி புரியும் இடத்தில் நிதானம் தேவை. பண விஷயத்தில் கவனம் அவசியம்.

கடகம்: புனர்பூசம் 4 : சிலரின் நடவடிக்கையால் சோர்வு ஏற்படும். அமைதி காப்பது நல்லது.
பூசம் : விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிறருக்கு அறிவுரை கூற வேண்டாம்.
ஆயில்யம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

சிம்மம்: மகம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த செயலில் லாபம் காண்பீர்கள்.
பூரம் : பிரச்னைகளை சமாளிப்பீர்கள். உறவினர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்.
உத்திரம் 1: உங்களுடைய முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையால் புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: உங்களுடைய செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
அஸ்தம் : சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும்.
சித்திரை 1, 2 : உங்கள் செயல்களுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு அதிர்ஷ்டம் காண்பீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். செயல்களில் தடையும்,தாமதமும் ஏற்படும்.
சுவாதி : எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் செயல் இழுபறிக்குப்பின் முடியும். இன்று பொது இடங்களில் விழிப்புணர்வு தேவை.

விருச்சிகம்: விசாகம் 4 : பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பொறுமை அவசியம்.
அனுஷம் : முயற்சியில் தடை ஏற்பட்டு பின்னர் நிறைவேறும். பிறரிடம் பேசுவதில் கவனம் தேவை.
கேட்டை : வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் கிடைக்காமல் போகும்.

தனுசு: மூலம் : தடைபட்டிருந்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். அதிர்ஷ்டமான நாள்.
பூராடம் : இன்று நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களின் தனித்திறமை வெளிப்படும்.
உத்திராடம் 1 : மற்றவரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்: உத்திராடம் 2, 3, : தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றிய எண்ணம் இப்போது வேண்டாம். லாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : மற்றவர்களின் நெருக்கடியால் சங்கடம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் தேவை.
அவிட்டம் 1, 2 : செலவுகள் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் உண்டாகும். மனஅமைதி தேவையான நாள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: மனதில் குழப்பம் உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவதால் சங்கடம் குறையும்.
சதயம் : குழப்பங்களைத் தவிர்ப்பதால் முயற்சி வெற்றியாகும். சிந்திக்க வேண்டிய நாள்.
பூரட்டாதி 1, 2, 3: தன்னம்பிக்கை அதிகரிக்கும். கோயில்களுக்கு செல்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: வெளியூர் பயணங்களால் சங்கடத்தை சந்திப்பீர்கள். செலவுகள் பல வழியில் உண்டாகும்.
உத்திரட்டாதி : கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வீண்செலவு அதிகரிக்கும்.
ரேவதி : திடீர் செலவு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here