இன்றைய ராசி உங்களுக்கு எப்படி? – 03.07.2022

0
178

மேஷம் : அசுவினி: செயல்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும்.
பரணி: நிறைவேறாமல் இருந்த உங்களது முயற்சிகள் இன்று நிறைவேறும்.
கார்த்திகை 1: உங்களின் செயல்களை குறை கூறி வந்தவர்கள் மனமாற்றம் அடைவர்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். சூழ்நிலைகள் உங்கள் முயற்சிக்கு சாதகமாகும்.
ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு எதிர்பார்த்தவற்றில் மகிழ்ச்சியான நிலையை அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: கோயில் வழிபாட்டால் மகிழ்ச்சி காண்பீர்கள். மனதில் இருந்த சுமை விலகும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர். மாற்று மதத்தினரின் உதவி உங்களை மகிழ வைக்கும்.
திருவாதிரை: வேலை விஷயமாக வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: சகோதரர்கள் உதவியுடன் உங்களது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4: குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக இன்றைய நாளை ஒதுக்குவீர்கள்.
பூசம்: முயற்சிகள் நிறைவேறும் நாள். குடும்பத்தினரால் உங்களது செயல் வெற்றியாகும்.
ஆயில்யம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம், இன்று உங்களிடம் வந்து சேரும்.

சிம்மம் : மகம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நன்மையான நாள்.
பூரம்: குடும்பத்தினருக்காக செலவுகள் அதிகரித்தாலும், அதற்கேற்ப வருவாய் வந்து சேரும்.
உத்தரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். அவசியமற்ற வேலைகளை ஒதுக்கி வையுங்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: உங்களுக்கு வசதியாக வீட்டை மாற்றி அமைக்க முயற்சிப்பீர்கள்.
அஸ்தம்: அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவு செய்வீர்கள்.
சித்திரை 1, 2: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் : சித்திரை 3, 4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
சுவாதி: எதிர்பார்த்த செய்தி காலையிலேயே வந்து சேரும். வெளியூர் பயணம் யோகம் தரும்.
விசாகம் 1, 2, 3: நெருக்கடிகள் விலகும். நண்பர்களின் மூலம் உங்களின் தேவைகள் நிறைவேறும்.

விருச்சிகம்: விசாகம் 4: தொழிலை மாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
கேட்டை: உங்களை ஏளனம் செய்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு: மூலம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். மனம் மகிழும்படியான நிலை ஏற்படும்.
பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1: குடும்பத்தினரை மகிழ்ச்சி படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: கோயில் வழிபாட்டால் மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.
திருவோணம்: உங்களது பிரச்னைகளை மற்றவர்களிடம் கொண்டு செல்ல வேண்டாம்.
அவிட்டம் 1, 2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்

கும்பம் : அவிட்டம் 3, 4: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
சதயம்: புதிய நட்பினால் உங்கள் வாழ்வில் திருப்புமுனை உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: நினைத்தவை வெற்றியாகும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம் : பூரட்டாதி 4: சுப நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.
உத்திரட்டாதி: வீட்டிற்குள் நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியை அடைவீர்கள். நன்மையான நாள்.
ரேவதி: உறவினர்களுடன் திடீர் பயணம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here