இன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் 12.08.2022

0
271

மேஷம்: அசுவினி : வியாபாரத்தில் உண்டான தடை விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
பரணி : உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
கார்த்திகை 1 : புதியவர்களை நம்பி இன்று வேலை எதுவும் ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : உங்கள் முயற்சி லாபம் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் தடைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள். நன்மையான நாள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : மதியம் வரை உங்கள் செயல் இழுபறியாகும் அதன்பின் நிறைவேறும். பொறுமை தேவை.
திருவாதிரை : தடைகளைத் தாண்டி நினைத்ததில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்கள். மதியத்திற்கு மேல் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4 : கவனமான நாள். மதியத்திற்கு மேல் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்பட்டு மறையும்.
பூசம் : மதியம் வரை இருந்த நிலை மாறும். நினைத்த செயலை நிறைவேற்ற கடின முயற்சி எடுப்பீர்கள்.
ஆயில்யம் : இன்று மற்றவர்களிடம் விவாதங்கள் வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.

சிம்மம்: மகம் : அரசு வழியில் உங்கள் முயற்சி பலிக்கும். சுபசெய்தி வீடு தேடி வரும்.
பூரம் : பிறர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1 : புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்களுடைய முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.
அஸ்தம் : குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 : தடைகளை அகற்றி தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். நட்பு வட்டம் விரியும்

துலாம்: சித்திரை 3, 4: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சுவாதி: புதிய வாகனம் வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும். பயணங்களால் நன்மை உண்டு.
விசாகம் 1, 2, 3: சாமர்த்தியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்: விசாகம் 4 : உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் தொழிலில் வெற்றி அடைவீர்கள்.
அனுஷம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் தொழிலில் இருந்து வந்த தடை விலகும்.
கேட்டை : நேற்று ஏற்பட்ட கடனை அடைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

தனுசு: மூலம் : கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்னை சரியாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
பூராடம் : நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்

மகரம்: உத்திராடம் 2, 3, 4: தொழிலில் இருந்து வந்த போட்டிகள் விலகும். லாபம் காணும் நாள்.
திருவோணம் : மதியத்திற்கு மேல் குழப்பம் விலகும். தொழிலில் விழிப்புணர்வு ஏற்படும் நாள்.
அவிட்டம் 1, 2 : வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு தகவல் வந்து சேரும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர்.
சதயம் : நேற்றைய பிரச்சனையை சரி செய்வீர்கள். தொழிலில் லாபம் காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: பூரட்டாதி 4 : வியாபாரத்தில் திட்டமிட்டு லாபம் காண்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும்.
உத்திரட்டாதி : பிள்ளைகள் வழியில் செலவு அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி : உங்கள் திட்டங்களை மாற்றி அமைப்பீர்கள். முயற்சியில் எதிர்பாராத சிறுதடை தோன்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here