இன்றைய ராசி பலன் உங்களுக்கு எப்படி? -16.07.2022

0
286

மேஷம்: அசுவினி : எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள்.
பரணி : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: விரும்பியவரை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : தடைபட்ட செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2 : பணியாளர்களின் குறைகளைக் கேட்டு சரி செய்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். முயற்சி நிறைவேறும்.
திருவாதிரை : எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு தேடி வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் 1, 2, 3 : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். பாதியில் நின்ற ஒரு செயல் இன்று நிறைவேறும்.

கடகம்: புனர்பூசம் 4 : சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம், அமைதியும் தேவை.
பூசம் : மற்றவரை நம்பி செய்யும் செயல் இழுபறியில் முடியும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்கள். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வார்கள்.

சிம்மம்: மகம் : பெரியவர்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.
பூரம் : தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடம் தீரும். குடும்பத்தில் அனுசரித்து செல்வீர்கள்.
உத்திரம் 1 : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். அதிகாரி பாராட்டுவார்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். உங்கள் தொழிலில் லாபம் ஏற்படும்.
அஸ்தம் : புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு
சித்திரை 1, 2 : பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உதவி கேட்டு ஒருவர் உங்களை சந்திப்பார்.

துலாம் : சித்திரை 3, 4 : பூர்வீக சொத்து பிரச்னை மீண்டும் தோன்றும். நிதானம் அவசியம்.
சுவாதி : முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டாலும் முடிவு உங்களுக்கு எதிர்மறையாகும்.
விசாகம் 1, 2, 3 : பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எண்ணம் உண்டாகும். சேமிப்பில் கவனம் செல்லும்.

விருச்சிகம்: விசாகம் 4 : எதிர்ப்பார்ப்பு ஒன்று தள்ளிப் போகும். குடும்பத்தில் சல சலப்பு உண்டாகும்.
அனுஷம் : தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் காண்பீர்கள்.
கேட்டை : வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். வெளியூர் பயணம் ஆதாயத்தை உண்டாக்கும்.

தனுசு : மூலம் : துணிச்சலுடன் செயல்பட்டு எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள்.
பூராடம் : பணியாளர்கள் ஒத்துழைப்புடன் தொழிலை விரிவு செய்வீர்கள். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எண்ணம் நிறைவேறும் நாள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : உறவினர் ஆதரவுடன் நேற்றைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
திருவோணம் : கேட்ட இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
அவிட்டம் 1, 2 : புதிய வேலை வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : வேலைகளின் காரணமாக சலிப்பு மேலிடும். செயல்களில் குழப்பம் உண்டாகும்.
சதயம் : மற்றவர்கள் உங்களை அலட்சியம் செய்வதாக நினைத்து வருந்தாதீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : பணியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காண்பீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4 : அலைச்சல் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடிக்க முடியாமல் போகும்.
உத்திரட்டாதி : பணிபுரியும் இடத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
ரேவதி : பழைய கடன்களால் நெருக்கடியை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் தடைபடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here