இன்றைய ராசி பலன் உங்கள் பலன் -29.07.2022

0
251

மேஷம் : அசுவினி: பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்றாலும் ஒரு முயற்சி நிறைவேறும்.
பரணி: தேவைகள் பூர்த்தியாகும். பங்குதாரர்களுடன் உண்டான பிரச்சினைகள் முடியும்.
கார்த்திகை 1: தாய்வழி உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். வழக்கு தள்ளிப்போகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் கூடும்.
ரோகிணி: உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
மிருகசீரிடம் 1, 2: அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். தடைபட்டிருந்த தொகை கைக்கு வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும்.
திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று தீரும்.

கடகம் : புனர்பூசம் 4: உங்கள் கவனக்குறைவால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
பூசம்: வேலைப்பளு அதிகரிக்கும். ஒரு சிலரின் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள்.
ஆயில்யம்: உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மையை எட்ட முடியாமல் போகும்.

சிம்மம்: மகம்: பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. வேறு சிந்தனைகள் வேண்டாம்.
பூரம்: விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்க முடியும்.
உத்திரம் 1: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். கடன்களை அடைப்பீர்கள்.
அஸ்தம்: பழைய முதலீடு ஒன்றிலிருந்து எதிர்பாராத லாபம் காண்பீர்கள். நன்மையான நாள்.
சித்திரை 1, 2: சிந்தித்து செயல்பட்டு ஆதாய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

துலாம் : சித்திரை 3, 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.
சுவாதி: புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3: மற்றவர்களுடன் அனுசரித்துச் சென்று நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் திறமையால் ஒரு செயலில் ஆதாயம் காண்பீர்கள்.
அனுஷம்: பகைவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.

தனுசு : மூலம்: முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். பகைவரால் நெருக்கடி தோன்றும்.
பூராடம்: உதவுவதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் காணாமல் போவர். கவனம் தேவை.
உத்திராடம் 1: உத்தியோகத்தில் எதிர்ப்பு வலுக்கும். அமைதி காப்பது நன்மையாகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: புதிய நண்பர் ஒருவரால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
திருவோணம்: எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். அவிட்டம் 1, 2: உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். வருமானம் கூடும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: மறைமுகத் தொல்லை கொடுத்து வந்தவர்களை கண்டறிந்து விலக்குவீர்கள்.
சதயம்: பகைவர் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம் : பூரட்டாதி 4: உறவினர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள்.
ரேவதி: வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பாராத வருமானம் வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here